/* */

புரட்டாசி சனிக்கிழமைகளில் நைனாமலை வரதராஜப்பெருமாள் கோயிலுக்கு செல்ல தடை

புரட்டாசி சனிக்கிழமைகளில் நைனாமலை வரதராஜப்பெருமாள் கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

HIGHLIGHTS

புரட்டாசி சனிக்கிழமைகளில் நைனாமலை வரதராஜப்பெருமாள் கோயிலுக்கு செல்ல தடை
X

நைனாமலை வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால்,  ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற பக்தர்கள்.

நாமக்கல் மாவட்டம், புதன்சந்தையில் இருந்து சேந்தமங்கலம் செல்லம் வழியில் பிரசித்திப்பெற்ற நைனாலை வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது. இங்கு மலை மீது வீற்றிருக்கும் வரதராஜப்பெருமாள் மற்றும் குவலயவள்ளி தாயாரை தரிசிக்க மிகவும் குறுகிய 3,000 படிக்கட்டுகள் வழியாகச் செல்லவேண்டும்.

ஆண்டுதோறும் இக்கோயில் திறந்திருந்தாலும், புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய மலை ஏறி சாமி தரிசனம் செய்வது வழக்கம். நாமக்கல் மட்டுமின்றி சேலம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் இங்கு சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.

இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் நைனாமலை கோயிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதையொட்டி நைனாமலை கோயிலுக்கு பக்தர்கள் யாரும் செல்லக்கூடாது என்று கோயில் நிர்வாகத்தின் சார்பில் சாலைகளில் பல இ டங்களில் போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. போலீசார் தடுப்புகள் ஏற்படுத்தி கோயிலுக்கு வரும் பக்தர்களை திருப்பி அனுப்பி வைத்தனர்.

கோயில் அடிவாரத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் வரை மட்டுமாவது அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதனை போலீசார் ஏற்க மறுத்துவிட்டனர். கடும் கெடுபிடியால் சாமி தரிசனம் செய்ய குடும்பத்துடன் வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏமாற்றத்துடன் வீட்டுக்கு திரும்பிச்சென்றனர்.

Updated On: 18 Sep 2021 10:30 AM GMT

Related News