/* */

போக்குவரத்துக்கழக நஷ்டத்தை ஈடு செய்ய தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை

அரசு போக்குரவத்துக்கழ நஷ்டத்தை ஈடு செய்ய, தமிழக அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என்று ஊழியர் சம்மேளனக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

HIGHLIGHTS

போக்குவரத்துக்கழக நஷ்டத்தை ஈடு செய்ய தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை
X

நாமக்கல்லில் நடைபெற்ற அரசு போக்குரவத்துக்கழ சிஐடியு தொழிற்சங்க கூட்டத்தில், அதன் மாவட்ட செயலாளர் வேலுசாமி பேசினார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) சார்பில் கோரிக்கை விளக்க கூட்டம், நாமக்கல் அரசு பணிமனை முன்பு நடைபெற்றது. சங்கத்தலைவர் வரதராஜன் தலைமை வகித்தார். பொருளாளர் மோகன்குமார் வரவேற்றார். சிஐடியு மாவட்ட செயலாளர் வேலுசாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

கூட்டத்தில், 14வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக பேசி முடிவு செய்ய வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கான பணப்பலன்கள் மற்றும் அகவிலைப்படி, மருத்துவக்காப்பீடு திட்டம் உடனே வழங்க வேண்டும். போக்குவரத்து கழங்களின் வரவுக்கும், செலவுக்கும் உள்ள வித்தியாசத்தொகையை தமிழக அரசு வழங்க, பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும். போக்குவரத்து கழகங்களை தனியார் மயமாக்குவதை தவிர்க்க வேண்டும் என்பவை உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

மத்திய சங்க நிர்வாகிகள் பழனிசாமி, செந்தில்குமார், நாமக்கல் கிளை தலைவர் கலைச்செல்வன், செயலாளர்கள் பெரியசாமி, கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 30 July 2022 2:30 AM GMT

Related News