/* */

முதல்வர் ஸ்டாலின் நாமக்கல் வருகை: 2 நாட்கள் டிரோன்கள் பறக்கத்தடை

முதல்வர் ஸ்டாலின் நாமக்கல் வருகையையொட்டி 2 நாட்கள் டிரோன்கள் பறக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

முதல்வர் ஸ்டாலின் நாமக்கல் வருகை: 2 நாட்கள் டிரோன்கள் பறக்கத்தடை
X

நாமக்கல் நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளதால், இன்று முதல் 2 நாட்களுக்கு நாமக்கல் பகுதியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் நகருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் 2ம் தேதி வருகை தருகிறார். நாளையும் 3ம் தேதியும் அவர் நாமக்கல் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். இதையொட்டி நாமக்கல் மாவட்ட எல்லையான பரமத்திவேலூர், நாமக்கல், ராசிபுரம் உள்ளிட்ட தாலுக்கா பகுதிகளில், 2 நாட்களும் டிரோன்கள் மூலம் வீடியோ, போட்டோ பதிவு செய்யவும், இதர காரணங்களுக்காக டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்படுகிறது. இதை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Updated On: 1 July 2022 2:21 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...