/* */

நாகை மீனவர்கள் குடும்பத்துக்கு முன்னாள் அமைச்சர் ஆறுதல்

நடுக்கடலில் மாயமான நாகை மீனவர்கள் குடுமபத்துக்கு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேரில் ஆறுதல் கூறினார்.

HIGHLIGHTS

நாகை மீனவர்கள் குடும்பத்துக்கு முன்னாள் அமைச்சர் ஆறுதல்
X

நாகை அடுத்துள்ள சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த 9 மீனவர்கள் கேரளா அருகே டவ்தே புயலில் நடுக்கடலில் படகு விபத்துக்குள்ளாகி மாயமானார்கள். மீனவர்கள் இதுவரை மீட்கபடாத காரணத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

இந்த நிலையில் சாமந்தான் பேட்டை மீனவ கிராமத்திற்கு சென்ற முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான ஓ.எஸ்.மணியன் காணாமல் போன மீனவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.

மேலும் அதிமுக சார்பாக பாதிக்கபட்ட 9 மீனவர்களின் குடும்பத்திற்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவியை அமைச்சர் வழங்கினார். பின்னர் பேசிய முன்னால் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ; நடுக் கடலில் காணாமல் போன நாகை மீனவர்களை தேடும் பணியில் மத்திய அரசு நேரடியாக ஈடுபட வேண்டும் எனவும், மீனவர்களை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வந்தாலும், தீவிர முயற்சி எடுக்க வேண்டும் எனவும், காணாமல் போன மீனவர்களை மீட்பதற்கான பணிகளை பிரதமர் மோடி முடுக்கிவிட வேண்டும் என்றார்.

மேலும் மத்திய அரசு முழுவீச்சில் வான்வெளி தேடுதலையும், கடல்வழித் தடங்களையும், ரேடர் போன்ற அதி நவீன கருவரிகள் வசதிகளையும், விஞ்ஞானதொழில் நுட்பத்தையும் பயன்படுத்திய மீனவர்களை மீட்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினார்.

Updated On: 19 May 2021 6:52 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  2. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  3. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
  4. ஈரோடு
    ஈரோடு ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சிக்னலில் நிழல் தரும் பந்தல்...
  5. திருப்பூர்
    திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள்;...
  6. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்தத் தயாராக இருக்க அறிவுறுத்தல்
  7. மதுரை மாநகர்
    மதுரை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், நாளை குருபகவானுக்கு சிறப்பு
  8. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் : அமைச்சர்...
  9. லைஃப்ஸ்டைல்
    மனித உறவுகளின் சந்தோஷத்தை அழிக்கும் மிக மோசமான ஆயுதம் சந்தேகம்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஏமாற்றாதே ஏமாற்றாதே... ஏமாறாதே ஏமாறாதே..!