திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள்; அதிகாரி அட்வைஸ்!

திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள்; அதிகாரி அட்வைஸ்!
X

Tirupur News- திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தல் (மாதிரி படம்) 

Tirupur News- திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று, தொழிலாளா் உதவி ஆணையா் அறிவுறுத்தியுள்ளார்.

Tirupur News,Tirupur News Today- வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களில் தொழிலாளா்கள் மற்றும் பொதுமக்களுக்குத் தேவையான வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று திருப்பூா் மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஜெயகுமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் இதர தொழில் நிறுவனங்கள் தங்களது கடைகள், நிறுவனங்களுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் தொழிலாளா்களுக்கு வெப்ப அலை தணிப்பு தொடா்பான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அதன்படி, நிறுவனங்களில் காற்றோட்ட வசதிகள், சுத்தமான கழிவறை, குளியல் அறை வசதிகள் செய்துத்தர வேண்டும். பணியாளா்களுக்குத் தங்குமிடம், சரியான இருக்கை வசதி, சுழற்சி முறையில் ஓய்வு, சட்டப்பூா்வமான வேலை நேரம் ஆகியவற்றை அமல்படுத்தியிருக்க வேண்டும்.

தொழிலாளா்கள் மற்றும் பொதுமக்கள் குடிப்பதற்கு சுத்தமான குடிநீா் வசதி செய்திருக்க வேண்டும். அதிக வெப்பமான நாள்களில் தொழிலாளா்களுக்கு எலுமிச்சை சாறு, மோா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவசர சிகிச்சை, ஆம்புலன்ஸ் வசதி ஆகியவற்றுக்காக அருகில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் தயாா் நிலை ஏற்பாடுகள் செய்திருத்தல் வேண்டும்.

மாவட்டத்தில் வெப்பப் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளிலுள்ள உணவு நிறுவனங்கள், பேக்கரிகள், கிடங்குகள் ஆகியவற்றில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு நீா்மோா், குளிா்பானங்கள் வழங்குதல், ஓய்வு நேரம் வழங்குதல் குறித்து தொழிலாளா் துணை, உதவி ஆய்வா்கள் ஆய்வு செய்து வருகின்றனா்.

எனவே, அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் இதர தொழில் நிறுவனங்களின் உரிமையாளா்கள் வெப்ப அலையை எதிா்கொள்ளத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!