/* */

நாகை மாவட்ட நகர்ப்புற தேர்தலில் வெற்றி பெற்ற 117 கவுன்சிலர்கள் பதவி ஏற்பு

நாகை மாவட்ட நகர்ப்புற தேர்தலில் வெற்றி பெற்ற 117 வார்டு உறுப்பினர்கள் இன்று அந்தந்த அலுவலகங்களில் பதவி ஏற்றனர்.

HIGHLIGHTS

நாகை மாவட்ட நகர்ப்புற தேர்தலில் வெற்றி பெற்ற 117 கவுன்சிலர்கள் பதவி ஏற்பு
X

நாகை மாவட்டத்தில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் இன்று பதவி ஏற்றனர்.

நாகை மாவட்டத்தில் நடந்த முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாகை மற்றும் வேதாரண்யம் ஆகிய இரண்டு நகராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றியுள்ளது. நாகை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில், 16வது வார்டில் போட்டியின்றி ஒருவர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், 35 வார்டுகளுக்கு நடந்த தேர்தலில் தி.மு.க. 24 வார்டுகளிலும், தி.மு.க. கூட்டணி கட்சிகள் 3 வார்டுகளிலும், அ.தி.மு.க. 5 வார்டுகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 3 வார்டுகளிலும் வெற்றிபெற்றனர்.

இதேபோல வேதாரண்யம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் தி.மு.க. 17 இடங்களையும், தி.மு.க. கூட்டணி கட்சிகள் 2 இடங்களையும், அ.தி.மு.க. 1 வார்டையும், சுயேட்சை 1 வார்டையும் கைப்பற்றியுள்ளது. 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் நாகப்பட்டினம் மற்றும் வேதாரண்யம் ஆகிய இரண்டு நகராட்சிகளையும் அ.தி.மு.க. வென்றிருந்த நிலையில் தற்போது இரண்டு நகராட்சிகளையும் தி.மு.க. தன்வசப்படுத்தி உள்ளது.

பேரூராட்சிகளை பொறுத்தவரை கீழ்வேளூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில், 8 வார்டுகளை தி.மு.க.வும், தி.மு.க. கூட்டணி கட்சியான ம.தி.மு.க. 2 வார்டுகளையும், அ.தி.மு..க 2 வார்டுகளையும், சுயேட்சைகள் 3 வார்டுகளையும் கைப்பற்றினர்.

வேளாங்கண்ணி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில், தி.மு.க. 11 வார்டுகளையும், தி.மு.க. கூட்டணி கட்சியான ம.ம.க. 1 வார்டையும், அ.தி.மு.க. 2 இடங்களையும், சுயேட்சை 1 வார்டையும் கைப்பற்றியது.

தலைஞாயிறு பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் அ.தி.மு.க. 8 வார்டு களையும், தி.மு.க. 6 வார்டுகளையும், தி.மு..க கூட்டணி கட்சியான வி.சி.க. 1 வார்டையும் கைப்பற்றினர்.

திட்டச்சேரி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் 8-வார்டு களையும், தி.மு.க. 4 வார்டுகளையும், தி.மு.க. கூட்டணி கட்சிகள் 2 வார்டுகளையும், அ.தி.மு.க. 1 வார்டையும் கைப்பற்றியது.

இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 117 நகர் மற்றும் பேரூர் மன்ற உறுப்பினர்கள் நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் பொறுப்பேற்றுக் கொண்டனர். நாகை நகராட்சியில் வரிசையாக பொறுப்பேற்றுக்கொண்ட 36 வார்டு உறுப்பினர்களுக்கும் நகராட்சித் தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீதேவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

Updated On: 2 March 2022 10:02 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனியில் 6வது நாளாக மழை! வீரபாண்டியில் வானில் வர்ணஜாலம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஈரோடு
    கடம்பூர் வனத்தில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்ற பெண் யானை...
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கொட்டிய கோடை மழை: ஒரே நாளில் 94.3 மி.மீ பதிவு
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  10. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...