ஈரோடு மாவட்டத்தில் கொட்டிய கோடை மழை: ஒரே நாளில் 94.3 மி.மீ பதிவு

ஈரோடு மாவட்டத்தில் கொட்டிய கோடை மழை: ஒரே நாளில்  94.3 மி.மீ பதிவு
X

மழை (கோப்புப் படம்).

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கோடை மழை பெய்து வெப்பம் சற்று குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கோடை மழை பெய்து வெப்பம் சற்று குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்தது. கடந்த வாரம் வரை தினமும் சுமார் 110 டிகிரி வெயில் பதிவானது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக கோடை மழை பெய்து வருவதால், வெயிலின் தாக்கம் சற்று குறைந்து உள்ளது.

மாவட்டத்தில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. தொடர்ந்து , மதியம் 1.30 மணியளவில் தாளவாடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதனைத் தொடர்ந்து, இரவு 7 மணி அளவில் ஈரோடு மாநகர் முழுவதும் மழை பெய்யத் தொடங்கியது. சுமார் அரை மணி நேரம் இந்த மழை நீடித்தது. இதனால் மாநகரின் பல இடங்களில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதேபோல், நம்பியூர், பவானி, டி.என்.பாளையம், பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு 8 மணிக்கு பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 45 நிமிடம் நீடித்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இது ஒரு புறம் இருந்தாலும், இந்த மழை காரணமாக மாவட்டத்தில் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

மாவட்டத்தில் நேற்று (மே.12) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் இன்று (மே.13) திங்கட்கிழமை காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேர நிலவரப்படி பெய்த மழையின் அளவு விவரம் மில்லி மீட்டர் பின்வருமாறு:-

தாளவாடி - 48.00 மி.மீ,

குண்டேரிப்பள்ளம் - 20.1 மி.மீ,

நம்பியூர் - 11.00 மி.மீ,

பெருந்துறை - 11.00 மி.மீ,

பவானி - 3.2 மி.மீ,

சென்னிமலை - 1.00 மி.மீ,

மாவட்டத்தில் மொத்தமாக 94.3 மி.மீ ஆகவும், சராசரியாக 5.55 மி.மீ ஆகவும் மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!