/* */

மதுரையில்,'மணமகள் தேவை' நூதன போஸ்டர் மூலம் பெண் தேடும் இளைஞன்..!

மதுரையில்,'மணமகள் தேவை' என்று ஒரு இளைஞர் போஸ்டர் அடித்து தனது துணைவியை தேடி வருகிறார்..!

HIGHLIGHTS

மதுரையில்,மணமகள் தேவை நூதன  போஸ்டர் மூலம் பெண் தேடும் இளைஞன்..!
X

மணமகள் தேவை போஸ்டர்.

மதுரையில் எப்போதுமே போஸ்டர்களுக்கு பஞ்சம் இருக்காது. அரசியல், சினிமா சுவரொட்டிகள் அசரவைக்கும். சில நடிகர்கள் அல்லது அரசியல்வாதிகள் என்றால் பஞ்ச் வசனங்கள் துள்ளி விழும். இப்போது கல்யாண போஸ்டர்களும் வரத்தொடங்கிவிட்டன.

அட ஆமாங்க.. கல்யாணம் ஆகாத ஒரு இளைஞன் பொண்ணு கிடைக்காமல், 'மணமகள் தேவை' என்று போஸ்டர் அடித்து தெருவுக்குத் தெரு ஒட்டியுள்ளார். மதுரையில் இதுதான் இன்னிக்கு ட்ரெண்டிங்.

மதுரை வில்லாபுரம் அருகே மீனாட்சி நகரைச் சேர்ந்த இளைஞன் ஜெகன் (27) . இவர் நன்றாக சம்பாதிக்கிறார். மாத வருமானம் ரூ. 40 ஆயிரம். மேலும் சொந்தமாக நிலமும் இருக்கிறது. ஆனாலும் அவருக்கு பெண் கிடைக்கவில்லை. தேடினார்.. தேடினார்..தேடினார்..தேடிக்கொண்டிருக்கிறார்..! ஆனாலும் அவருக்கு பெண் அமையவில்லை.

விரக்தி நிலைக்குப் போன.. ஜெகன் மதுரை நகருக்குள் மற்றும் புறநகர் பகுதிகளிலும், திண்டுக்கல் மாவட்டத்தில் சில இடங்களிலும் 'மணமகள் தேவை' என்ற போஸ்டர் அடித்து ஒட்டினார். புரோக்கர் வைத்து பெண் தேடுவது, ஆன்லைன் பதிவில் பெண் தேடுவது, உறவினர்களிடம் சொல்லி பெண் தேடுவது, கல்யாண அமைப்புகள் மூலமாக பெண் தேடுவதை கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் போஸ்டர் அடித்து பெண் தேடுவதை இப்போதுதான் பார்க்கிறோம்.

அந்த இளைஞருக்கு இந்த போஸ்டர் மூலமாவது ஒரு நல்ல பெண் கிடைக்க வாழ்த்துவோம்.

Updated On: 22 Jun 2022 10:08 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  3. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  4. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  5. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
  6. ஆன்மீகம்
    குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்
  7. திருவண்ணாமலை
    தபால் வாக்கு சீட்டுகளை பாதுகாப்பாக கையாள ஆட்சியர் அறிவுரை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு பயண கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே
  9. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை தணிக்க அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஏற்பாடு
  10. செங்கம்
    சுட்டெரிக்கும் வெயில்: சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் வருகை