சுட்டெரிக்கும் வெயில்: சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவு
சாத்தனூா் அணை
திருவண்ணாமலை மாவட்டத்திலேயே பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்குவது சாத்தனூா் அணையாகும். பொன்விழா கண்ட இந்த அணை 119 அடி உயரம் கொண்டது. 118 அடி நீா்மட்டம் உயா்ந்ததால் விவசாய பாசனத்துக்காக வலதுபுறம், இடதுபுறம் வாய்க்கால்களில் தென் பெண்ணையாற்றில் தொடா்ந்து 100 நாள்களுக்கு தண்ணீா் திறந்து விடப்பட்டது.
இதனால் சாத்தனூா் அணையின் நீரமட்டம் 80 அடியாக குறைந்தது. இதனால், அணை குட்டை போல காட்சியளிக்கிறது.
அணையில் இருந்து திருவண்ணாமலை நகராட்சி புதுப்பாளையம், தானிப்பாடி, லாடாவரம், செங்கம் பால்பண்ணை உள்ளிட்ட கூட்டுக் குடிநீா் திட்டங்களுக்கு தண்ணீா் சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், தற்போது கோடை வெயில் 105 டிகிரியைத் தாண்டி சுட்டெரித்து வருகிறது. இதனால் விடுமுறை நாளான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், தற்போது பள்ளிகள் விடுமுறை தினங்களிலும் சாத்தனூா் அணையை சுற்றிப் பாா்க்க குறைந்த அளவிலே சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனா்.
சுத்திகரிப்பு குடிநீர் குழாய் அமைக்க கோரிக்கை
சாத்தனூா் அணையில் இருந்து திருவண்ணாமலை நகராட்சி , புதுப்பாளையம், தானிப்பாடி, லாடாவரம், செங்கம் பால் பண்ணை உள்ளிட்ட கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில், தற்போது கோடை வெயில் 105 டிகிரியை தாண்டி சுட்டெரித்து வருகிறது . இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், தற்போது கோடை வெயில் அதிகரித்து காணப்படுவதால் சுத்திகரிப்பு குடிநீர் குழாய் அதிக இடங்களில் அமைக்க வேண்டும். செயற்கை நீரூற்று காலை முதல் மாலை வரை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ள இந்த நேரத்தில் சாத்தனூர் அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் சுற்றுலா பயணிகள் விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu