/* */

மதுரை நகரில் புதைசாக்கடையில் அடிக்கடி ஏற்படும் அடைப்பால் நீடிக்கும் அவலநிலை

மதுரை நகரில் புதைசாக்கடையில் அடிக்கடி ஏற்படும் அடைப்பால் நீடிக்கும் அவலநிலை சரியாகுமா என பொதுமக்கள் எதிர்பார்ப்பு

HIGHLIGHTS

மதுரை நகரில் புதைசாக்கடையில் அடிக்கடி ஏற்படும் அடைப்பால் நீடிக்கும் அவலநிலை
X

, மதுரை மாநகராட்சி 30-வது வார்டில் ,சௌபாக்கி விநாயக கோவில் தெரு, வீரவாஞ்சி தெரு ஜூப்பிலி டவுன் குருநாதன் தெரு ஆகிய தெருக்களில், பாதாள சாக்கடையில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு, கழிவு நேரானது சாலையில் ஆறு போல ஓடுகிறது

அடிக்கடி ஏற்படும் புதை சாக்கடை அடைப்புக்கு: மாநகராட்சி நிர்வாகம் நிரந்தர தீர்வுகாண வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மதுரை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட காமராசபுரம், பாலரங்கபுரம், கீழ் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அதிகம் வசிக்கின்றனர்.நெருக்கடி மிகுந்த பகுதிகளில், வீடுகள் அதிகம் இருப்பதனால் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் புதைசாக்கடை மூலம் நிரம்பி அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் ஆறாக ஓடுகிறது. இதனால் ,துர்நாற்றம் வீசுவதோடு கொரானா மலேரியா டெங்கு உள்ளிட்ட நோய்தொற்று பரவும் அபாயம் ஏற்படுகிறது.

இதுகுறித்து, சம்பந்தபட்ட மாநகராட்சி மற்றும் தெற்கு மண்டல அதிகாரிகளிடம் முறையிடும் போது, அவ்வப்போது மட்டுமே கழிவு நீர் அப்புறபடுத்தும் வாகனம் மூலம் தற்காலிகமாக தீர்வு செய்து வருகின்றனர்.மீண்டும் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடி சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதிவாசிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இந் நிலையில் ,மீண்டும் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது.எனவே, புதை சாக்கடை அடைப்பு ஏற்படாமல் இருக்க பாதாள சாக்கடைகளை புனரமைக்கவோ அல்லது ஆழப்படுத்தி அமைக்கவும் கூடுதல் புதை சாக்கடைகளை அமைத்து நிரந்தர தீர்வுகாண வேண்டும் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.

மதுரை மேலமடை, தாசிலா நகர், கோமதிபுரம் பகுதிகளில் சாக்கடைகள் சரிவர அமைக்கப்படாததால்,மழைக் காலங்களில் கழிவு நீரானது சாலை நடுவே பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், மதுரை மாநகராட்சி 30-வது வார்டில் ,சௌபாக்கி விநாயக கோவில் தெரு, வீரவாஞ்சி தெரு ஜூப்பிலி டவுன் குருநாதன் தெரு ஆகிய தெருக்களில், புதை சாக்கடையில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு, கழிவு நேரானது சாலையில் ஆறு போல ஓடுகிறது. இதை ,மதுரை மாநகராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுத்து புதைசாக்கடை சீரமைப்பு பணிகளை உடனே துவக்கிட இப்பகுதி குடியிருப்போர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

Updated On: 9 July 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  4. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  6. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  7. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  8. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  9. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  10. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...