/* */

முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் காவலர் பணியிடம்: விண்ணப்பிக்க 29ம் தேதி கடைசி

கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் காலியாக உள்ள இரவு காவலர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

HIGHLIGHTS

முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் காவலர் பணியிடம்: விண்ணப்பிக்க 29ம் தேதி கடைசி
X

கிருஷ்ணகிரி முன்னாள் படைவீரர் நல அலுவலகம்.

இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் காலியாக உள்ள இரவு காவலர் பணியிடம் நேரடி நியமனம் மூலம் நிரப்பிட உள்ளது.

இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அட்டவணை வகுப்பினரை சார்ந்தோராக இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சம் 35 வயது உடையவராகவும் இருத்தல் வேண்டும். பணி நேரம் மாலை 5 மணி முதல் காலை 9 மணி வரையாகும்.

இந்தப் பணிக்கு விருப்பமுள்ள, தகுதியான நபர்கள் தங்களின் அசல் புகைப்படம், கல்வித்தகுதி சான்று நகல், சாதி சான்று நகல் மற்றும் இருப்பிடச்சான்று நகலுடன் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை, உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், கிருஷ்ணகிரி - 635 001. என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் வரும் 29ம் தேதி ஆகும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 8 Sep 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...
  2. டாக்டர் சார்
    கோடையில் ஜிலு ஜிலு தண்ணீரை குடிக்கலாமா..? அவசியம் தெரியணும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    கணவருக்கு திருமண நாள் வாழ்த்துகள்!
  4. ஆன்மீகம்
    புனிதமான வாழ்க்கையை கொண்டாடும் சந்தோஷமான ரமலான் தின வாழ்த்துகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    என் காதல் சிகரத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. ஈரோடு
    ஈரோடு மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி திட்டப் பணிகள் குறித்து ஆட்சியர்...
  7. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புதிய விடியல்! வாழ்த்துவோம் வாங்க
  8. லைஃப்ஸ்டைல்
    கால் நூற்றாண்டு காதல் வாழ்க்கை..!
  9. லைஃப்ஸ்டைல்
    புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கான வாழ்த்துச் செய்திகள்
  10. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்