/* */

பத்ம விருதுகள்: தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

பத்ம விருதுகள் பெற தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்

HIGHLIGHTS

பத்ம விருதுகள்: தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
X

இந்திய அரசு வழங்கும் பத்ம விருதுகள்

இது குறித்த அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மேன்மை பொருந்திய பணிகளுக்காக இந்திய அரசாங்கம் பத்ம விருதுகளை (பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ) அறிவித்துள்ளது. கலை, அறிவியல், இலக்கியம், மருத்துவம், கல்வி, விளையாட்டு, தொழில்நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு 2022 ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற 2022ம் ஆண்டு குடியரசு தினவிழாவின் போது, இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளது. இந்த விருதுகள், தொழில், இனம், உத்தியோகம், பாலினம் ஆகிய வித்தியாசமின்றி வழங்கப்படுகிறது. இந்த விருதுகள் தொடர்பான விவரங்கள் மற்றும் விண்ணப்பங்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். எனவே, தகுதியுள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

Updated On: 30 July 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.