/* */

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செப்.12-ஆம் தேதி மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 800 -க்கும் மேற்பட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடத்தப்படுகிறது

HIGHLIGHTS

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செப்.12-ஆம் தேதி 800 -க்கும் மேற்பட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி இன்று வெளியிட்ட தகவல்: தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க, வருகிற 12-ஆம் தேதி மாநிலம் தழுவிய மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. அதன் அடிப்படையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி போடாதவர்கள், இரண்டாவது தவணை போட வேண்டியவர்கள் பயனடையும் வகையில், கொரோனா தடுப்பூசி முகாம் காலைவேளையில் ஒரு இடத்திலும், மாலையில் வேறு இடத்திலும் என மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வார்டு பகுதிகள், ஊராட்சி மற்றும் கிராம பகுதிகளிலும், அரசு ஆரம்ப சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள் என 800- க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்படவுள்ளது.

இந்த வாய்ப்பினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த முகாம்களில் அரசு மருத்துவர்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனை செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரியர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் பயனடைய உள்ளார்கள். கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாத ஆசிரியர்களும் மற்றும் கல்வித்துறை பணியாளர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

மேலும், முதல் தவணை தடுப்பூசி கோவிஷீல்டு செலுத்திக் கொண்டவர்கள் 84 நாட்கள் கழித்தும், கோவேக்சின் செலுத்திக் கொண்டவர்கள் 28 நாட்கள் கழித்தும் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டியவர்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

Updated On: 11 Sep 2021 10:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்