/* */

கொங்கு நாடு என்ற பிரிவினை விதையை விதைக்க வேண்டாம்: கே.பி.முனுசாமி

கொங்கு நாடு என்ற பிரிவினை விதைகளை விதைக்க வேண்டாம் என, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

HIGHLIGHTS

கொங்கு நாடு என்ற பிரிவினை விதையை விதைக்க வேண்டாம்: கே.பி.முனுசாமி
X

கிருஷ்ணகிரி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத் திறந்து வைத்த கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ.

கிருஷ்ணகிரி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், அதிமுக எம்.எல்.ஏ. முனுசாமி பங்கேற்று, திறந்து வைத்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மாநிலக் கட்சி ஆட்சிக்கு வரும்போது, மாநில அரசு அதிகாரங்களை வரைமுறைப்படுத்தி, அந்த அதிகாரத்துக்குள் மத்திய அரசு வரக்கூடாது என்பது அனைத்துக் கட்சிகளும் எதிர்பார்க்கின்ற ஒன்று. அந்த அடிப்படையில்தான் எம்ஜிஆர், ஜெயலலிதா, நேற்று வரை முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி ஆகியோரது சிந்தனை அப்படியாகத்தான் இருந்தது.

அதேபோல், அதிமுகவின் நிலைப்பாடும், அண்ணா எடுத்த நிலைப்பாட்டின்படியே நாங்கள் வந்து கொண்டிருக்கிறோம். இப்போது திடீரென்று கொங்கு நாடு என்கின்றனர். யாரையோ அவர்கள் சிறுமைப்படுத்த வேண்டும் என இப்படி ஒரு விஷமத்தனமான சிந்தனையில் இறங்குவது என்பது நாட்டுக்கு நல்லதல்ல. அது யார் கொண்டு வந்திருந்தாலும், யார் முன்னிறுத்தி இருந்தாலும் அவர்கள் இதைத் தவிர்க்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். சிறு, சிறு மாநிலங்களாக பிரிகின்றபோது, அந்த பலம் நிச்சயமாக குறையும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை தென்கோடி கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை உள்ள அனைத்து மக்களும், இது நம் தமிழ்நாடு என்று தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒரு சீரிய தூய சிந்தனையோடு வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த மக்களின் மனதில் கொங்கு நாடு என்ற பிரிவினை விதைகளை விதைக்க வேண்டாம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொலை, கொள்ளை அதிகம் நடக்கிறது. அதற்காக இப்போது வந்துள்ள அரசுதான் காரணம் என்று சொல்வதற்கு, நான் ஒன்றும் அனுபவம் குறைவானவன் அல்ல. இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பதற்கு முன்பாகக் காவல்துறை விழிப்புணர்வோடு இருந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

Updated On: 12 July 2021 11:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!