/* */

கிருஷ்ணகிரி: மீன்வள உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள 9 மீன்வள உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரி: மீன்வள உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
X

இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலக கட்டுப்பாட்டில் 9 மீன்வள உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் தமிழில் எழுத, படிக்க மற்றும் பேச தெரிந்திருக்க வேண்டும். நீந்துதல், மீன்பிடித்தல், வலை பின்னுதல், பரிசல் ஓட்டுதல், வலை வீசுதல் மற்றும் அறுந்த வலைகளை சரி செய்ய தெரிந்திருக்க வேண்டும். மீன்வளத்துறையின் மீனவர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று சான்று பெற்றிருப்போருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இன சுழற்சி முறையில் தேர்வு செய்யப்படுவதால், தகுதியான பெண் விண்ணப்பதாரர்கள் இல்லாத பட்சத்தில் அதே இனசுழற்சி ஒதுக்கீட்டில் ஆண் விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுவர். இனசுழற்சி முன்னுரிமை பெற்றவர் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் தகுதியான விண்ணப்பதாரர்கள் இல்லாத பட்சத்தில் அதே இன சுழற்சி ஒதுக்கீட்டில் முன்னுரிமையற்றோர் விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு எடுத்துக்கொள்ளப்படுவர்.

விண்ணப்பதாரர் 1.7.2021ம் தேதியன்று ஆதிதிராவிடர் / பழங்குடியினர் 35, பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் 32, மற்றும் இதர வகுப்பினர் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் கல்வி சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வயது நிரூபண சான்றிதழ் நகல், ஜாதி சான்றிதழ் நகல், முன்னுரிமை சான்றிதழ் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தை, உதவி இயக்குநர், மீன்துறை அலுவலம், 4வது கிராஸ், கோ&ஆப்ரேட்டிவ் காலனி, கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு வருகிற ஆகஸ்ட் மாதம் 5ம் தேதிக்குள் கிடைக்கத்தக்க வகையில் விண்ணப்ப உறையின் மீது, கிருஷ்ணகிரி மாவட்ட மீன்வள உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பித்தல் என எழுதி அனுப்பிட வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 15 July 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  2. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
  3. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  4. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  5. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  6. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  7. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  9. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  10. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?