/* */

கரூர் மாவட்டத்தில் கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்

கரூர் மாவட்டத்தில் கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

கரூர் மாவட்டத்தில் கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்
X

கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலு.

கரூர் மாவட்டத்தில் கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கோழி வெள்ளைக்கழிச்சல் நோய் என்பது ஒரு வகை வைரஸ் நச்சுயிரியினால் ஏற்படும் தொற்று நோயாகும். இந்நோய் தீவனம், குடிநீர், காற்று மூலம் பரவும் தன்மை கொண்டது. நோய் கண்ட கோழிகளில் வெள்ளையாகவும், பச்சையாகவும் கழிச்சல் காணப்படும். மேலும், மூச்சுத்திணறல், நடுக்கம், வாதம், சோர்வு மற்றும் தீவனம் உட்கொள்ளும் அளவு குறைந்தும் காணப்படும். இந்நோய் தாக்கிய கோழிகளில் இறப்பு அதிகமாக இருக்கும். கோழிக்குஞ்சுகளுக்கு 2 மாத வயதில் வெள்ளைக் கழிச்சல் நோய் தடுப்பூசி போடுவதன் மூலம் இந்நோய் வராமல் தடுக்கலாம். இந்நோயைக் கட்டுப்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் இருவார தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

கரூர் மாவட்டத்திற்கென 2.10 லட்சம் டோஸ்கள் வெள்ளைக்கழிச்சல் நோய் தடுப்பூசி பெறப்பட்டு அனைத்து கால்நடை நிலையங்களிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக 01.02.2024 முதல் 14.02.2024 வரை கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை பெருமருத்துவமனை, கால்நடை மருத்துவமனை, கால்நடை மருந்தகம் மற்றும் கால்நடை கிளைநிலையப் பகுதிகளில் இலவசமாக கோழி வெள்ளைக்கழிச்சல் நோய் தடுப்பூசி போடப்பட இருக்கிறது. இத்தடுப்பூசியினை 2 மாத வயது முடிவடைந்த கோழிக்குஞ்சுகள் முதல் அனைத்து கோழிகளுக்கும் போடலாம்

எனவே, விவசாயிகள் மற்றும் கோழி வளர்ப்போர் அனைவரும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கோழி வெள்ளைக்கழிச்சல் நோய் தடுப்பூசியினை இலவசமாக தங்கள் கோழிகளுக்கு போட்டுக்கொண்டு கோழிகளை இறப்பிலிருந்தும், பொருளாதார இழப்பிலிருந்தும் பாதுகாத்து பயன் அடையுமாறு கேடுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

Updated On: 2 Feb 2024 11:40 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?