/* */

கரூர் மாவட்டத்தில் வரைவு வாக்குச்சாவடி மைய பட்டியல்: ஆட்சியர் வெளியீடு

கரூர் மாவட்டத்தில் வாக்குச் சாவடிகளை வரையறை செய்யும் பொருட்டு வரைவு வாக்குச் சாவடி பட்டியலை ஆட்சியர் வெளியிட்டார்.

HIGHLIGHTS

கரூர் மாவட்டத்தில் வரைவு வாக்குச்சாவடி மைய பட்டியல்: ஆட்சியர் வெளியீடு
X

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முன்னிலையில், வரைவு வாக்குச்சாவடி மைய பட்டியலை ஆட்சியர் வெளியிட்டார்.

கரூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களை மறுவரையறை செய்யும் பொருட்டு வரைவு வாக்குச்சாவடி மையங்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி கரூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளை மறுவரையறை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில் 1040 வாக்குச்சாவடி மையங்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலை, ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முன்னிலையில் வெளியிட்டார்.

இந்த வரைவு வாக்குச்சாவடி பட்டியல் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், குளித்தலை, கரூர் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகம் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடி மையங்களில் மறுவரையரை செய்தது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் செப்டம்பர் 20 ம் தேதிக்குள் தங்களது முறையீடுகள் மற்றும் கோரிக்கைகளை வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆகியோரிடம் எழுத்து மூலமாக தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வரைவு வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர் தொகுதியில், 4 வாக்குச்சாவடி மையங்களும் அரவக்குறிச்சி தொகுதியில், 2 வாக்குச்சாவடி மையங்களும், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 2 வாக்குச்சாவடி மையங்களிலும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டன.

Updated On: 13 Sep 2021 7:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கணவருக்கு திருமண நாள் வாழ்த்துகள்!
  2. ஆன்மீகம்
    புனிதமான வாழ்க்கையை கொண்டாடும் சந்தோஷமான ரமலான் தின வாழ்த்துகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    என் காதல் சிகரத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. ஈரோடு
    ஈரோடு மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி திட்டப் பணிகள் குறித்து ஆட்சியர்...
  5. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புதிய விடியல்! வாழ்த்துவோம் வாங்க
  6. லைஃப்ஸ்டைல்
    கால் நூற்றாண்டு காதல் வாழ்க்கை..!
  7. லைஃப்ஸ்டைல்
    புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கான வாழ்த்துச் செய்திகள்
  8. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை பெறும் 4,42,124 பெண்கள்
  10. வீடியோ
    🔴LIVE :கொல்கத்தாவில் நிர்மலா சீதாராமனின் அனல் பறக்கும் உரை ||...