/* */

கரூர் மாநகராட்சியாக தரம் உயர்த்த விளக்க கூட்டம்

கரூர் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்த உள்ளாட்சி பிரதிநிதிகள், பொது அமைப்புகளுக்கு விளக்க கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கரூர் மாநகராட்சியாக தரம் உயர்த்த விளக்க கூட்டம்
X

கரூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவது தொடர்பாக விளக்கமளிக்கிறார் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர்.

கரூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துதல், புகளூர் பேரூராட்சி மற்றும் பள்ளப்பட்டி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்துதல் தொடர்பாக உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுஅமைப்புகளுக்கு விரிவான விளக்க கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், கரூர் நாகராட்சியுடன் இணைக்கப்படும் ஊராட்சிகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தங்களது ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைத்தால் 100 நாள் வேலைத்திட்டம் கிடைக்காது என்பன உள்ளிட்ட சில கோரிக்கைகளை தெரிவித்தனர். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், கரூர் நகராட்சி அருகில் உள்ள ஒரு சில பேரூராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்துவது, புகழூர் மற்றும் பள்ளப்பட்டி பேரூராட்சிகளை அதன் அருகில் உள்ள கிராம ஊராட்சிகளை இணைத்து நகராட்சியாக தரம் உயர்த்துதல் குறித்து தமிழக முதல்வர் அண்மையில் அறிவிப்பு செய்து இருந்தார்.

இதன் அடிப்படையில், பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளின் விரிவான விளக்க கூட்டம் நடத்தப்பட்டது. இவை அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை அரசுக்கும், தலைமைச் செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகு அரசு இதற்கான ஆணையை அறிவிக்கும் என்றார்.

மாநகராட்சி தரம் உயர்த்துவது என்பது பரப்பளவு, மக்கள்தொகை விகிதம், ஆண்டு வருமானம் இவை மூன்றையும் கணக்கில்கொண்டு தரம் உயர்த்தப்படுகிறது. தற்போது தரம் உயர்த்தப்படும் உள்ளாட்சி அமைப்புகளில் பதவியில் இருக்கும் பிரதிநிதிகள் இன்னும் 3 1/2 ஆண்டுகளுக்கு அதன் பொறுப்புகளில் வகிப்பார்கள். பதவிக் காலம் முடியும் வரை பதவில் இருப்பார்கள். ஊரக பகுதியில் உள்ள 100 நாள் வேலைத்திட்டம் உள்ளிட்ட ஊரக திட்டங்களில் எந்த மாற்றமும் இருக்காது. தரம் உயர்தப்படும் உள்ளாட்சி அமைப்புகளில் வரி உயர்வு என்பது தற்போது இருக்காது என்றார்.

Updated On: 4 Sep 2021 4:33 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு