/* */

கரூர் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்புடன் நாளை வாக்கு எண்ணிக்கை

காலை வரை அந்த பகுதிகளுக்கு யாரும் செல்ல தடை உள்ள நிலையில் தீவிர பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்து வருகிறது.

HIGHLIGHTS

கரூர் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்புடன் நாளை வாக்கு எண்ணிக்கை
X

கரூர் அரசுக்கல்லூரியில் அமைந்துள்ள வாக்கு எண்ணிக்கை  மையம்

கரூர் மாவட்டத்தில் நடந்து முடிந்த நகரமைப்பு உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு – 7 இடங்களில் வைக்கப்பட்டுள்ள வாக்கு இயந்திரங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, 3 நகராட்சிகள் உள்ளிட்ட 8 பேரூராட்சிகளுக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவுகள் நேற்று முன் தினம் நடைபெற்று மாவட்ட அளவில் 76.34 விழுக்காடு வாக்காளர்கள் வாக்களித்துள்ள நிலையில்., அந்த வாக்களிக்கப்பட்ட வாக்கு இயந்திரங்கள் 7 இடங்களில் பூட்டி சீல் வைக்கப்பட்டு அந்த வாக்கு இயந்திரங்களில் உள்ள வாக்குகள் நாளை எண்ணப்படும் நிலையில், அந்த வாக்கு எண்ணும் இயந்திரம் அமைந்துள்ள இடங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர் மாநகராட்சி, குளித்தலை, பள்ளப்பட்டி, புகளூர் ஆகிய மூன்று நகராட்சிகள், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், புலியூர், புஞ்சை தோட்டக்குறிச்சி, பழைய ஜெயங்கொண்ட சோழபுரம், மருதூர், நங்கவரம், உப்பிடமங்கலம் ஆகிய 8 பேரூராட்சிகள் என்று 246 வார்டுகளில் அன்னபோஸ்ட்டாக தேர்வு செய்யப்பட்ட 5 போக 241 வார்டுகளுக்கும் தேர்தல் நேற்று முன் தினம் நடைபெற்றது.

இந்நிலையில், கரூர் மாநகராட்சியில் பதிவான வாக்கு இயந்திரங்கள் கரூர் அரசு கலைக்கல்லூரியில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. இதே போல், குளித்தலை நகராட்சியின் வாக்கு இயந்திரங்கள் குளித்தலை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், பள்ளப்பட்டி நகராட்சியின் வாக்கு இயந்திரங்கள் அதே பள்ளப்பட்டி ஹாசான உஸ்வதுன் ஹசனா மாமன்ஜி ஹாஜி அப்துல் லதீப் பெண்கள் கல்லூரியிலும், புகளூர் நகராட்சி மற்றும் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட வாக்கு இயந்திரங்கள் அதே பகுதியில் உள்ள புகளூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், அரவக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட வாக்கு இயந்திரங்கள் அரவக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியிலும், புலியூர், உப்பிடமங்கலம் ஆகிய பேரூராட்சிகளுக்குட்பட்ட புலியூர் ராணிமெய்யம்மை அரசு உயர்நிலைப்பள்ளியிலும்,

கிருஷ்ணராயபுரம், மருதூர், நங்கவரம், பழையஜெயங்கொண்டசோழபுரம் ஆகிய 4 பேரூராட்சிகளுக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களும் மாயனூர் அரசு ஆசிரியர் பயிற்சி மையத்தில் பூட்டி போலீஸாரின் தீவிர கண்காணிப்பில் உள்ளது. மேலும், சிசிடிவி கேமிராக்கள் உயர்ந்த தொழில்நுட்பத்துடன் தீவிர சோதனையும் போடப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரபுசங்கர், கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் அவ்வப்போது சோதனை குறித்து ஆய்வும் மேற்கொண்டும் வருகின்றனர்.

காலை வரை அந்த பகுதிகளுக்கு யாரும் செல்ல தடை உள்ள நிலையில் தீவிர பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்து வருகின்றது. மேலும், இந்த சிசிடிவி கேமிராக்கள் பதிவுகளை காண்பதற்காக பூத் ஏஜெண்ட்டுகள் மட்டும் சென்று வரலாம், நாளை இந்த 7 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் பத்திரிக்கையாளர்களுக்கு என்று தனியாக செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 21 Feb 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...