/* */

சைபர் க்ரைம் வழக்கில் கைது செய்யப்பட்டவர் குண்டர் சட்டத்தில் கைது

தமிழகத்தில் சைபர் க்ரைம் குற்றத்துக்காக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படும் 2 வது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

HIGHLIGHTS

சைபர் க்ரைம் வழக்கில் கைது செய்யப்பட்டவர் குண்டர் சட்டத்தில் கைது
X

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பிரசாத்.

கடந்த மாதம், கரூரில் பணியாற்றும் வங்கி அதிகாரியை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் அவருடைய மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டி உள்ளனர். இதையடுத்து பயந்துபோன வங்கி அதிகாரி மிரட்டிய நபர்களுக்கு கூகுல் பே மூலம் 49 ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளார். தொடர்ந்து அந்த நபர்கள் வங்கி அதிகாரியை மிரட்டியது அடுத்து, அவர் கரூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து வழக்கை பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், பொள்ளாச்சியை சேர்ந்த இரண்டு நபர்கள் கரூரைச் சேர்ந்த வங்கி அதிகாரியை மிரட்டி அவரது மனைவி புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டியது அம்பலமானது.

இதையடுத்து, வங்கி அதிகாரியை மிரட்டிய பொள்ளாச்சியை சேர்ந்த பிரசாத் மற்றும் அஜித்குமார் ஆகிய இரண்டு நபர்களை கரூர் மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் சைபர் குற்றத்தில் ஈடுபட்ட பிரசாத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

இதன் அடிப்படையில் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், பிரசாத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். தமிழகத்திலேயே சைபர் கிரைம் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படும். இரண்டாவது நபர் பிரசாத் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 4 Dec 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  2. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  3. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  4. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  5. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  6. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  7. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  8. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  10. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...