/* */

போலீஸ் உடையணிந்து 80 லட்சம் கொள்ளை

15 மணி நேரத்தில் பணத்தை மீட்டு 5 பேரை கைது செய்தது போலீஸ்

HIGHLIGHTS

போலீஸ் உடையணிந்து 80 லட்சம் கொள்ளை
X

கேரள மாநிலம் நெய்யாற்றிகரை பகுதியை சேர்ந்தவர் சம்பத் இவர் பிரபல நகை கடை ஒன்றை நடத்தி வருகின்றார், இவர் கேரள மற்றும் தமிழக பகுதிகளில் உள்ள மற்ற நகை கடைகளுக்கும் மொத்தமாக நகை விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் உள்ள சில கடைகளுக்கு நகையை விற்பனை செய்த பணம் ரூபாய் 76லட்சத்தி 40 ஆயிரத்தை எடுத்து கொண்டு கேரளாவிற்கு சொகுசு காரில் புறப்பட்டனர்.

தக்கலை அருகே காரவிளை தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்து கொண்டிருக்கும் போது மற்றொரு சொகுசு காரில் போலீசார் உடையணிந்து வந்த மர்ம நபர்கள் நான்கு பேர் அந்த பணத்தை சினிமா பட பாணியில் வழிமறித்து கொள்ளையடித்து சென்றனர்.

தொடர்ந்து நகைக்கடை உரிமையாளர் சம்பத் தக்கலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காரை வழிமறித்து ரூ.76.40 லட்சம் கொள்ளையடிக்க போலீஸ் வேடமணிந்து வந்த 4-மர்ம நபர்களையும் பிடிக்க போலீசார் நான்கு தனி படை அமைத்து விசாரணை நடத்தினர்.

கொள்ளையர்கள் கேரள மாநிலம் தீருவனந்தபுரத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததில் அங்கு விரைந்து சென்ற தனிப்படையினர் திருவனந்தபுரத்தை சேர்ந்த டிரைவர் கோபக்குமார், சுரேஷ்குமார், கண்ணன், ராஜேஷ்குமார், மனு என்ற சஜின்குமார் ஆகிய 5-பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 76.40 லட்சத்தை பறிமுதல் செய்ததோடு அவர்கள் பயன்படுத்திய கார் போலீஸ் உடை மற்றும் 10-செல்போன்களை பறிமுதல் செய்தனர்

15-மணி நேரத்தில் கொள்ளையர்களை கைது செய்த தனிப்படை போலீசாரின் செயல் மாவட்ட மக்களின் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

Updated On: 20 Jan 2021 5:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’