/* */

குமரியில் புத்தாண்டையொட்டி சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை

புத்தாண்டில் குமரி சுற்றுலா தலங்களுக்கு செல்லவும் பார்வையிடவும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

HIGHLIGHTS

குமரியில் புத்தாண்டையொட்டி சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை
X

2022 புத்தாண்டை வரவேற்க நாடு முழுவதும் பொதுமக்கள் தயாராகி வரும் நிலையில் ஓமிக்கிரான் தொற்று மற்றும் கொரோனா தொற்று பரவல் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

பொதுவாக புத்தாண்டு தினத்தில் கடற்கரைகள் பூங்காக்கள் சுற்றுலா தளங்களில் கூடும் பொதுமக்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் புத்தாண்டை வரவேற்பார்கள்.

அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை கன்னியாகுமரி கடற்கரை, திற்பரப்பு நீர்வீழ்ச்சி சொத்தவிளை கடற்கரை, சங்குமுகம் கடற்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களில் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்தினருடன் நண்பர்களுடனும் கூடிநின்று புத்தாண்டை வரவேற்பது வழக்கம்.

இதனிடையே புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் சூழ்நிலையில் கொரோனா நோய்த்தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடற்கரைப் பகுதிகள், நீர்வீழ்ச்சிகள், பூங்காக்கள் உட்பட அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் வரும் டிசம்பர் 31, மற்றும் ஜனவரி 1 மற்றும் 2 வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 தினங்கள் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்லவும் பார்வையிடவும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

Updated On: 18 Dec 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்