/* */

குமரியில் பெண் காவல் ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குறித்த புகாரில் பெண் காவல் ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

குமரியில் பெண் காவல் ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
X

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திய பெண் காவல் ஆய்வாளர் வீடு.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் கண்மணி.

ஏற்கனவே மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு ஆய்வாளராகவும் பணியாற்றிய இவருடைய கணவர் சேவியர் பாண்டியன் குமரி மாவட்ட நீதிமன்றத்தில் குற்றவியல் இணை இயக்குநராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் அவர்மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் இன்று காலை திடீரென அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

மேலும் பியூட்டி பார்லர் வைத்திருக்கும் இவருடைய தோழி அமுதா தங்கியிருக்கும் மீனாட்சி கார்டன் பகுதியில் உள்ள வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

ஏற்கனவே இவர் மீது லஞ்ச புகார் இருந்து வந்த நிலையில், இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சோதனையில் காவல் ஆய்வாளர் வீட்டில் இருந்து லட்சக்கணக்கில் பணம் மற்றும் ஏராளமான ஆவணங்களை போலீசார் கைப்பற்றி இருப்பதாக கூறப்படுகிறது.

Updated On: 12 Feb 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள்;...
  2. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்தத் தயாராக இருக்க அறிவுறுத்தல்
  3. மதுரை மாநகர்
    மதுரை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், நாளை குருபகவானுக்கு சிறப்பு
  4. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் : அமைச்சர்...
  5. லைஃப்ஸ்டைல்
    மனித உறவுகளின் சந்தோஷத்தை அழிக்கும் மிக மோசமான ஆயுதம் சந்தேகம்!
  6. லைஃப்ஸ்டைல்
    ஏமாற்றாதே ஏமாற்றாதே... ஏமாறாதே ஏமாறாதே..!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘தாய்வழி உறவில் இன்னொரு தகப்பனாய் ஆதரவு தருபவரே தாய் மாமன்’
  8. நாமக்கல்
    குமாரபாளையம் ஜேகேகே நடராஜா கல்லூரியில் 15 ம் தேதி கல்லூரி கனவு...
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பினை மழையாக்கும் அத்தை..!
  10. வீடியோ
    😡DMK-வை விமர்சித்தா கஞ்சா வழக்கா ? SavukkuShankar விவகாரத்தில்...