/* */

காலூர் கிராம ஊராட்சியில் மகளிர் தின விழா கோலாகலம்

சுய உதவி குழுக்கள் மற்றும் கிராம பெண்கள் இணைந்து மகளிர் தின விழாவில் விழிப்புணர்வு கோலம் மற்றும் திறன் போட்டிகள் நடைபெற்றது.

HIGHLIGHTS

காலூர் கிராம ஊராட்சியில் மகளிர் தின விழா கோலாகலம்
X

காலூர் கிராம ஊராட்சியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் விழிப்புணர்வு கோலம் மற்றும் பங்கு பெற்ற மகளிர்கள்.

உலகமெங்கும் மார்ச் மாதம் 8ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அவ்வகையில் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் மகளிர் தின விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டு இதில் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரம் அடுத்த காலூர் கிராம ஊராட்சி சார்பாக தலைவர் சகுந்தலாசங்கர் தலைமையில் கிராம சுய உதவிக் குழுவினர் , கிராம பெண்கள் இணைந்து கொண்டாடினர். இந்நிலையில் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் மலர்க்கொடி குமார் கலந்துகொண்டு பெண்களுக்காக செயல்படும் திட்டங்கள் , பெண் சிறுமி பாதுகாப்பு உதவி எண், பெண் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பெண்களின் தனித்தறமையை வெளிக்கொணரும் வகையில் விழிப்புணர்வு கோலங்கள் பேச்சுப் போட்டி மற்றும் நிர்வாக ஆலோசனை, வினாடி வினா உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி கோலாகலமாக விழாவினை சிறப்பித்தனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதுபோன்ற விழாக்கள் பெண்கள் தங்கள் தனித்திறமைகள் மட்டுமில்லாது அரசு திட்டங்களை அதிக அளவில் தெரிந்து கொள்ளவும் , தாங்களும் சமூக மாற்றத்திற்கு பங்கு பெற இயலும் என தெரிவித்தனர்

Updated On: 27 March 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?