/* */

காஞ்சிபுரத்தில் கொரோனா விதிகளை மீறி டிஎன்பிஎஸ்சி பயிற்சி வகுப்புகள்

காஞ்சிபுரத்தில் தனி மனித இடைவெளி இன்றியும், கொரோனா விதிகளை மீறி டிஎன்பிஎஸ்சி பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் கொரோனா விதிகளை மீறி  டிஎன்பிஎஸ்சி பயிற்சி வகுப்புகள்
X

காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் இன்று டிஎன்பிஎஸ்சி பயிற்சி வகுப்புகள்கான அறிமுக கூட்டம் நடைபெற்றது. 

தமிழக அரசு பணிக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வின் மூலமே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதற்கான பயிற்சி வகுப்புகள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக இந்த தேர்வில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பயிலும் பல நூறு பேர் தேர்வாகி வருவதால் காஞ்சிபுரத்தில் பயிற்சி பெற பல மாவட்டங்களில் இருந்தும் வந்து தங்கியிருந்து பயிற்சி பெறுகின்றனர்.

இந்த வகுப்பு பயிற்சி வகுப்பில் ஒவ்வொரு நிலையத்திலும் சுமார் 300க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் பயிலும் வகையில் தனியார் திருமண மண்டபத்தில் வாடகைக்கு எடுத்து பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

கடந்த 18 மாதங்களாக கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்த பயிற்சி வகுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் வீட்டிலேயே கற்று வருகின்றனர். இன்னும் இது போன்ற பயிற்சிகளுக்கு அரசு அனுமதி தரவில்லை.

இந்நிலையில் காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் அருகே தனியார் பயிற்சி மையம் தனியார் திருமண மண்டபத்தில் இன்று பயிற்சி வகுப்புகள்கான அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் பலர் முக கவசம் அணியாமலும் , தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் அமர்ந்து அறிமுக நிகழ்வுவினை கேட்டு வருகின்றனர்.

தொடர்ந்து இரண்டு மணி நேரம் நடைபெற்றும் வரும் இக்கூட்டத்தில், யாரேனும் ஒருவருக்கு பரவல் இருந்தால் இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் எளிதில் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுபோன்ற வகுப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Updated On: 10 Oct 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பகுதி சாலையில் நடமாடிய சிறுத்தை