/* */

பாலியல் வழக்கில் கைதான மூவருக்கு குண்டாஸ்

காஞ்சிபுரம் அருகே சாலை ஓரம் பேசிக் கொண்டிருந்த காதலர்களை மிரட்டி‌ பெண்ணிடம் பாலியல் குற்றங்களை செய்த மூவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்

HIGHLIGHTS

பாலியல் வழக்கில் கைதான மூவருக்கு குண்டாஸ்
X

பாலியல் வழக்கு கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் விக்கி மணிகண்டன் சிவக்குமார் ஆகிய மூவரை மீண்டும்  குண்டர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு கீழம்பி புறவழிச்சாலையில் தனியார் பள்ளி அருகே அமைந்துள்ள பகுதியில் காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவ மாணவியர் இருவர் மாலையில் தனிமையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதியில் சுற்றித்திரிந்த வாலிபர்கள் காதலனை மிரட்டி காதலியிடம் அத்துமீறி பாலியல் குற்றங்கள் செய்தது தொடர்பாக அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த சம்பவம் குறித்து அதே பகுதியை சேர்ந்த விக்கி மற்றும் அவரது நண்பர்களான சிவகுமார் மணிகண்டன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்க கூடாது என காவல்துறை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

மேலும் இதுபோன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கடும் சட்ட நடவடிக்கைகளின் கீழ் கைது செய்யப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் பெண்கள் அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர் குழுக்கள் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது.

தற்போது சிறையில் இருக்கும் இவர்கள் மீண்டும் குற்ற செயல்களை ஈடுபடக் கூடாது என முடிவெடுத்த காவல்துறை அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்து வந்தனர்.

இந்த குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளான

1) விக்னேஷ் (எ) விக்கி(22) , நெ.333.வளர்புரம், விப்பேடு கிராமம், காஞ்சிபுரம் மாவட்டம்

2) மணிகண்டன் (எ) ஊமை(22), ராணுவ வீரர் சாலை, செவிலிமேடு, காஞ்சிபுரம் மாவட்டம், மற்றும்

3) சிவகுமார் (எ) ஹுக்கு (20) வளர்புரம், இருளர் குடியிருப்பு, விப்பேடு கிராமம், காஞ்சிபுரம் மாவட்டம்,

ஆகிய மூவரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதன் அடிப்படையில் பரிந்துரையினை ஏற்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, மேற்படி மூன்று குற்றவாளிகளையும் ஓராண்டு தடுப்புக்காவலில் (GOONDAS) வைக்க உத்தரவு பிறப்பித்தார்.

Updated On: 13 April 2023 6:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...