/* */

காஞ்சிபுரம் அருகே 3.5 டன் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது, இரண்டு மினி லாரி பறிமுதல்

காஞ்சிபுரம் அருகே 3.5 டன் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து இரண்டு மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் அருகே  3.5 டன் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது,  இரண்டு  மினி லாரி பறிமுதல்
X

காஞ்சிபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் , ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் பெயிண்ட் நிறுவனத்தில் இருந்து பெங்களூருக்கு பொருட்களை ஏற்றிச் சென்ற லாரியில் ரேஷன் அரிசி கடத்துவதாக சென்னை குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

குடிமைபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி ஸ்டாலின் உத்தரவின்பேரில் , டி.எஸ்.பி.ஜான்சுந்தர் தலைமையில் ஆய்வாளர் விநாயகம் மற்றும் அவரது குழுவினர் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கீழம்பி சந்திப்பில் ஆய்வாளர் விநாயகம் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த கர்நாடகா பதிவு எண் கொண்ட லாரியை சோதனையிட்டபோது பெயிண்ட் பொருட்களுடன் அரிசி மூட்டைகள் கடத்தி செல்வது தெரியவந்தது.

லாரியை பறிமுதல் செய்து சோதனை மேற்கொண்டபோது 3.5டன் எடை உள்ள அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக ஆட்டுப்புதூரை சேர்ந்த தங்கமணி, மருதம் கிராமத்தை சேர்ந்த முத்துக்குமார், உளுந்தூர்பேட்டையை சேர்ந்த சதீஷ் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். சிவக்குமார் என்பவர் தலைமறைவாானார்

அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரு மினி லாரிகளை ஆய்வாளர் விநாயகம் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Updated On: 22 July 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  6. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  7. பொன்னேரி
    பொன்னேரி அருகே தொழிற்சாலையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
  8. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  9. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  10. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...