/* */

பாடம் நடத்திக் கொண்டிருந்த போதே மாரடைப்பு ஏற்பட்டு ஆசிரியர் உயிரிழப்பு

காஞ்சிபுரத்தில் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்த போதே மாரடைப்பு ஏற்பட்டு ஆசிரியர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

பாடம் நடத்திக் கொண்டிருந்த போதே மாரடைப்பு ஏற்பட்டு ஆசிரியர் உயிரிழப்பு
X

உயிரிழந்த தொழிற்கல்வி ஆசிரியர் சக்திவேல்.

காஞ்சிபுரம் டாக்டர்.சீனுவாசன் மேல்நிலைப் பள்ளியின் தொழிற்கல்வி ஆசிரியர் சக்திவேல் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் ஆசிரியர் மற்றும் மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட மிலிட்டரி ரோடு பகுதியில் பாரதிதாசன் நகர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல்(53). இவர் வைகுண்டபுரம் தெருவில் செயல்படும் காஞ்சிபுரம் டாக்டர் பி.எஸ். ஸ்ரீனிவாசன் மாநகராட்சி மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது.

இப்பள்ளியில் தொழிற்கல்வி வகுப்பு ஆசிரியராக சக்திவேல் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்த நிலையில் இன்று வழக்கம் போல் வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு வந்துள்ளார்.

இப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு தொழிற்கல்வி வகுப்பில் தொழிற்கல்வி வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த பொழுது ஆசிரியர் சக்திவேல் மாரடைப்பு காரணமாக நெஞ்சை பிடித்துக் கொண்டு சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

வகுப்பில் இருந்த மாணவர்கள் உடனடியாக அருகில் இருந்த தலைமை ஆசிரியரிடம் தகவல் அளித்த 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பொழுது ஆசிரியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.

இன்னும் 7 வருடம் பணி இருந்த நிலையில் திடீரென்று பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது வகுப்பறையிலேயே உயிர் பிரிந்த நிலையில் பள்ளி மாணவர்கள் மட்டும் ஆசிரியர்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும் , சோகத்தை ஏற்படுத்தியது. பள்ளி ஆசிரியர் உயிரிழப்பை தொடர்ந்து அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் இறந்த ஆசிரியருக்கு மௌன அஞ்சலி செலுத்தி பிற்பகல் விடுமுறை அளிக்கப்பட்டது.

இறந்த ஆசிரியர் சக்திவேல் இதே பள்ளியில் தொழிற்கல்வி படிப்பு முடித்து 1994ஆம் ஆண்டு பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக அதே பள்ளியில் அதே வகுப்பு ஆசிரியராக சேர்ந்து, கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் நிரந்தர ஆசிரியராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

Updated On: 4 July 2023 1:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    கொஞ்சம் பாலும் தேனும் கொடுங்க..! அறிவை அள்ளித்தருவார் விநாயகர்..!
  2. இந்தியா
    அரசியல் கட்சி மீது வழக்கில் குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை: நீதித்துறை...
  3. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  4. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  5. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  6. வீடியோ
    படம் ரொம்ப Average || ரெண்டு தடவ எடுத்து வச்சுருக்கானுங்க | ELECTION...
  7. வீடியோ
    பாக்கலாம் HEROINE சூப்பரா இருந்துச்சு | அதுவும் அந்த Song😉| INTK FDFS...
  8. கல்வி
    தமிழகம் முழுவதும் பொறியியல் படிப்பில் சேர 1.52 லட்சம் பேர் விண்ணப்பம்
  9. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  10. ஈரோடு
    ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி: சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்