/* */

கல்குவாரிகள் காலை 7 மணி முதல், மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும்

காஞ்சிபுரத்தில் கல்குவாரிகள் காலை 7 மணி முதல், மாலை 5 மணிவரை மட்டுமே செயல்பட வேண்டும் என்று கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார்

HIGHLIGHTS

கல்குவாரிகள் காலை 7 மணி முதல், மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும்
X

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி ( பைல் படம்)

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி கனிமம் வெட்டி எடுத்தல், எடுத்துச் செல்லுதல் மற்றும் கனிம இருப்பு வைத்தல் மற்றும் கனிமம் முகவர் விதிகளின்படி கனிம இருப்பு கிடங்கு மற்றும் கல் அரைக்கும் அரவை இயந்திரம் அமைத்து தொழில் புரியும் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கனிம முகவர் என பதிவு செய்ய வேண்டும்.

மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனிமை இருப்பு இடங்களை உடன் பதிவு செய்ய வேண்டும். தனிமை இருப்பு அனுமதி தர புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தில் வழங்கப்பட்ட அனுமதி சீட்டை எடுத்து செல்லும் வாகன ஓட்டிகள் தவறாது வழங்க வேண்டும்

கனரக லாரியில் ஜல்லி, எம்சாண்ட் மற்றும் இதர கனிமங்களை அனுமதி சீட்டு பெற்று தார்ப்பாய் கொண்டு நன்கு மூடி பொது மக்கள் போக்குவரத்திற்கு இடையூறு இன்றி எடுத்துச் செல்ல வேண்டும்.

வரி குத்தகை உரிமையாளர்கள் தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் இசைவில் தெரிவித்து உள்ளவாறு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே உரிமம் வழங்கப்பட்ட பரப்பில் குவாரி பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

லாரியில் கனிமம் எடுத்து செல்லும் போது உரிய நடை சீட்டு மற்றும் அனுமதி சீட்டு ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட்டு ஓட்டுனரிடம் அளிக்க வேண்டும்.

இதை தவறும் பட்சத்தில் உரிய சட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அபராதத்துடன் அதிகபட்ச தண்டனையாக 5 வருடங்கள் சிறை தண்டனை வழங்க வழிவகை செய்யப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Updated On: 25 Aug 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு