/* */

தொடங்கிய இரண்டே நாளில் முடங்கிய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்

தொடங்கிய இரண்டே நாளில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் முடங்கி கிடப்பதாக விவசாயிகள் புகார் கூறினர்.

HIGHLIGHTS

தொடங்கிய இரண்டே நாளில் முடங்கிய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்
X

காலூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் முன் உள்ள நெல் மூட்டைகள்.

திறக்கப்பட்ட இரண்டாவது நாளே மூடப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்ட ஆட்சியர் திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட முழுவதும் பெய்த கனமழையால் கடந்த நவரை பருவத்தில் சுமார் 60 ஆயிரம் ஏக்கர் விளை நிலத்தில் நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் நடவு செய்தனர்.

இந்நிலையில் கடந்த 15 தினங்களாக நெல் அறுவடை துவங்கிய நிலையில் மாவட்ட முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை வைத்த நிலையில் மாவட்ட ஆட்சியர் மாவட்ட முழுவதும் 123 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார்.

அவ்வகையில் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 88 இடங்களில் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வைத்தார்.

இதில் களக்காட்டூர் - காலூர் செல்லும் வழியில் காலூர் பகுதியில் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் கடந்த ஆண்டு முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டது.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது நாளே அப்பகுதி தி.மு.க.வினர் விவசாயிகளின் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை தி.மு.க. உறுப்பினர்கள் தான் நடத்துவார்கள் என தெரிவித்து கொள்முதலை நிறுத்தியுள்ளதாக புகார் கூறப்பட்டது.

இதை அறியாத விவசாயிகள் ஏராளமான நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்திற்கு எடுத்து வந்து தற்போது வரை காத்திருக் கின்றனர். தி.மு.க.வினர் இந்த செயலினை விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு கடந்த மூன்று நாட்களாக நெல் கொள்முதல் செய்யாமல் விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகள் களத்தில் காத்துக் கிடப்பதாகவும் தெரிவித்தனர்.

ஏதேனும் திடீர் மழை வந்தால் அனைத்து நெல் மூட்டைகளும் வீணாகும் என்பதும் இது விவசாயிகளுக்கும் அரசுக்கும் இழப்புகளை தான் ஏற்படுத்தும் என்பதால் உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்பதே அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

Updated On: 29 March 2023 12:51 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...