/* */

தேர்வு அறிவுரைகளை உதாசீனம் செய்யும் மாணவர்கள்

தேர்வு அறையில் ஓழூங்கீனமாக நடந்து கொள்ளும் மாணவர்களுக்கு நிரந்தர தேர்வு தடை விதிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை எச்சரித்தது.

HIGHLIGHTS

தேர்வு அறிவுரைகளை உதாசீனம் செய்யும் மாணவர்கள்
X

காஞ்சிபுரம் தனியார் மேல்நிலை பள்ளி அருகே பள்ளி தேர்வு எழுத வந்த மாணவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பாடக்குறிப்புகள்

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவருக்கு நடத்தப்படும் அரசு தேர்வு கடந்த ஐந்தாம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கு தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இதேபோல் பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளும் துவங்கி தற்போது தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது.

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது இது மட்டும் இல்லாமல் தேர்வு அறையில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் மாணவர்களுக்கு நிரந்தர தேர்வு தடை விதிக்கப்படும் எனவும் எச்சரித்தது.தேர்வு மையங்களில் மாணவர்களை கண்காணிக்க பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டது.

இன்று பிளஸ் 2 மாணவர்களுக்கு இயற்பியல் மற்றும் பொருளியல் பாட பிரிவுகளுக்கான தேர்வுகள் நடைபெற்றன. இந்நிலையில் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே காஞ்சிபுரம் தனியார்‌ மேல் நிலை பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பாடப்புத்தகத்திலிருந்து பாடக் குறிப்புகளை கிழித்து தன்னுடைய உடலுக்குள் மறைத்து வைத்தனர். பொதுமக்கள் நடமாடும் பகுதியிலே இச்செயலை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இவர்களை தேர்வு செய்ய அதிகாரிகள் சோதனை செய்கிறார்களா என கண்காணிக்க சென்றபோது, ஏற்கனவே தேர்வு அறிக்கை சென்ற மாணவர்களிடம் இருந்து பல்வேறு குறிப்புகளை பறிமுதல் செய்து குப்பையாக வைத்திருந்தது மேலும் அதிர்ச்சியடைய வைத்தது.

இது குறித்து அங்கிருந்தவர்களிடம் கேட்டபோது பள்ளி மாணவர்களின் ஒழுங்கீன செயலை கட்டுப்படுத்தவே திணற வேண்டியுள்ளதாகவும் , தேர்வு விதிகளை கண்டு கொள்ளவதே இல்லை என என வருத்தத்துடன் தெரிவித்தார்.

Updated On: 20 May 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  4. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  5. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  7. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  8. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  9. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்