/* */

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: எஸ்.பி. துவக்கி வைத்தார்

காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கலந்து கொண்டு நகர வீதிகளில் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

HIGHLIGHTS

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: எஸ்.பி. துவக்கி வைத்தார்
X

காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் போதை பொருட்கள் தவிர்ப்பதில் குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை எஸ் பி சுதாகர் துவக்கி வைத்த போது

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு இரு சக்கர பேரணியினை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் மா சுதாகர் காஞ்சிபுரத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.-

உலகம் முழுவதும் மனித குல சமூகத்தை சீரழித்து வரும் போதை பொருள்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் ஜூன் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

அதன்படி ஜூன் 26 ஆம் தேதி சர்வதேச போதைப்பொருள் ஓழிப்பு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் போதைப்பொருள் குறித்து பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காவல்துறையினர் கலந்து கொண்ட இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் 300க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்ட போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் மா. சுதாகர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.


காஞ்சிபுரம் காந்தி சாலை இருந்து தொடங்கிய இருசக்கர வாகன பேரணி காமராஜர் தெரு , பேருந்து நிலையம் , அன்னை இந்திரா காந்தி சாலை , கிழக்கு , மேற்கு ராஜவீதிகள் உள்ளிட்ட காஞ்சிபுரம் நகரம் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது போதை பொருள் ஓழிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி சென்றனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு பள்ளி கல்லூரி மாணவிகளுக்கு திரைப்பட நடிகர் தாமு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Updated On: 26 Jun 2023 3:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?