/* */

காஞ்சிபுரத்தில் அனைவருக்கும் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்த எஸ்.பி.,

தீபாவளியை ஒட்டி விபத்தில்லா மாவட்டமாக செயல்பட உதவிய அனைத்து துறைகளுக்கும் தீபாவளியொட்டி இனிப்புகள் வழங்கி எஸ்.பி.சுதாகர்‌ வாழ்த்துகளை தெரிவித்தார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் அனைவருக்கும் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்த எஸ்.பி.,
X

தீபாவளி பண்டிகையை ஒட்டி விபத்தில்லா மாவட்டமாக செயல்பட வைத்த காவல்துறை, போக்குவரத்து துறை மற்றும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கிய எஸ்.பி எம். சுதாகர்.

காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை எல்லை என்பது இரண்டு துணைக்கோட்டமும் , 12 காவல் நிலையங்களும் , இரண்டு மகளிர் காவல் நிலையங்கள் உள்ளடக்கி அமைந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூன்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள்‌, ஐந்து டிஎஸ்பிக்கள், 20க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் மற்றும் ஒவ்வொரு காவல் நிலையத்திற்கு 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் , ஆயுதப்படைக் காவலர்கள் மற்றும் பயிற்சி காவலர்கள் என காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது 2000க்கும் மேற்பட்டோர் பணியில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த தீபாவளி பண்டிகையை விபத்து மற்றும் குற்ற செயல்கள் நிகழா வண்ணம் பொது மக்களுக்கு அளித்திட திட்டமிட்ட காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் , இதற்கென குழுக்கள் அமைக்கப்பட்டு, தொடர் பணிகளில் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் பொதுமக்களுக்கு பாதுகாப்பாகவும், விழிப்புணர்வு செயல் அறிவுரைகளை வழங்கி, கடந்த நான்கு நாட்களாக அனைத்தையும் வழிநடத்தப்பட்டது.

அவ்வகையில் காஞ்சிபுரம் நகரில் சிறிது போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு பெரிதும் நெரிசல் ஏற்படா வண்ணம் அனைத்து பகுதிகளும் செயல்பட்டது. இச்செயல் காஞ்சிபுரம் மக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. அரசு போக்குவரத்து துறை ஊழியர்கள் நெரிசலை குறைக்கும் வகையில் செயல்பட்டதால் காவல்துறை பணியும் சற்று குறைந்தது.

மேலும் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளிலும் காவல் துறையினர் பணிகளில் ஈடுபட்டு வந்ததால் வாகன விபத்தின்றி அனைவரும் பாதுகாப்பாக தங்கள் ஊர்களுக்கு பயணித்தனர்.

இதே போல் அனைத்து பேருந்து நிலையங்களையும் சிறப்பு குற்ற செயல் தடுப்பு காவல் பிரிவினர் நியமிக்கப்பட்டு, தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டதாலும், குற்ற செயல்கள் குறைந்தது பயணிகள் இடையே மகிழ்ச்சியளித்தது.

இன்று காலை தீபாவளி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு தற்போது மெல்ல மெல்ல பொழுதுபோக்கிற்காக பொதுமக்கள் வெளியில் வரும் நிலையில் மீண்டும் காவல்துறை தனது பணியை துவங்கி உள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம் சுதாகர், காஞ்சிபுரம் நகரில் பல்வேறு இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்பொழுது தீபாவளி பண்டிகை ஒட்டி சிறப்பாக பணியாற்றியும் , தொடர் பணியில் ஈடுபட்டு இருக்கும் காவல் துறையினருக்கு இனிப்புகள் வழங்கி அவர்களை ஊக்குவித்தார்.

இதேபோல் போக்குவரத்து ஊழியர்களான ஓட்டுநர் மற்றும் நடத்தினருக்கும் விபத்தில்லா காஞ்சி மாவட்டத்தை உருவாக்கியதற்கும் , நெரிசலற்ற வகையில் சாலையில் பயணிகள் பயணிக்கும் வகையில் செயல்பட்டதற்கும் போக்குவரத்து துறையினருக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்து இனிப்பு வழங்கினார்.

இந்த இரு தரப்பினருக்கும் போதிய ஒத்துழைப்பு நல்கிய பொதுமக்களுக்கும் , சாலையோர வியாபாரிகளுக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர். இனிப்புகளை வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தீபாவளி நாளில் தங்களுக்கு பணி வழங்கப்பட்டு குடும்பத்தினருடன் இல்லாமல் இருந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் வாழ்த்து செயல் தங்களை மேலும் மகிழ்ச்சியை அளிக்கிறதாக காவல்துறையினரும், எந்த ஒரு நாளிலும் எங்கள் இரு துறைக்கும் வாழ்த்து சொல்லும் அதிகாரிகளும், பயணிகளும் மிகக் குறைவே . அதுபோன்ற தருணத்தில் மாவட்டத்தின் உயர் காவல் அதிகாரி தங்களுக்கும் , பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்து சொல்லியது மகிழ்ச்சி அளிப்பதாக போக்குவரத்து துறையினர் தெரிவித்தனர்.

சாலை வியாபாரிகளோ , காவல்துறையினர் எப்போதும் எங்களை விரட்டியே பார்த்த நிலையில், பாதுகாப்பாகவும் , மகிழ்ச்சியுடன் இருக்க வாழ்த்து கூறி இனிப்பு வழங்கிய தருணம் தனக்கு அதிசயத்தையும், ஆச்சரியத்தையும் உண்டாக்கி உள்ளது என தெரிவித்தனர்.

இதுபோல் இனி வரும் காலங்களில் அனைத்து அரசு துறையிலும் ஒருங்கிணைந்து தங்களது பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் நிலையில் பொதுமக்களும் அதற்கு ஒத்துழைப்பு அளித்து விபத்தில் மாவட்டத்தை உருவாக்கிய பெருமையை அடைவோம்.

Updated On: 24 Oct 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  2. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  3. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  4. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  6. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  7. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  8. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!