/* */

பருவத மலைக்கு செல்லும் ஒரு லட்சத்து 8000 ருத்ராட்சங்களால் உருவான சிவலிங்கம்.

காஞ்சிபுரம் நித்திய அன்னதான அறக்கட்டளை சார்பில் எட்டுக்கு எட்டு உயரத்தில் ஒரு லட்சத்து 8 ஆயிரம் ருத்ராட்சங்களால் சிவலிங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பருவத மலைக்கு செல்லும் ஒரு லட்சத்து 8000 ருத்ராட்சங்களால் உருவான சிவலிங்கம்.
X

காஞ்சிபுரம் நித்திய அன்னதான அறக்கட்டளை சார்பில் ஒரு லட்சத்து 8 ஆயிரம் ருத்ராட்சங்களால் உருவாக்கப்பட்ட சிவலிங்கம் 

பருவதமலை அடிவாரத்திற்கு ஒரு லட்சத்து 8 ஆயிரம் ஐந்துமுக ருத்ராட்சம் கொண்டு 8 அடி உயரம் கொண்ட சிவலிங்கம் செய்து புறப்பாடு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

திருவண்ணாமலை மாவட்டம் பருவதமலை பகுதியில் உள்ள சிவன் கோயிலுக்கு மாதந்தோறும் பௌர்ணமி அன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பருவத மலைக்கு காஞ்சிபுரத்தை சேர்ந்த பருவதமலை கோடி ருத்ராட்ச தியான டிரஸ்ட் மூலமாக பருவதமலை அடிவாரத்தில் ருத்ராட்சை மாலைகளால் செய்யப்பட்ட சிவலிங்கத்தை அர்ப்பணிக்க முடிவு செய்தனர்.

இந்நிலையில் கடந்த 10 நாட்களாக ஒரு லட்சத்து 8 ஆயிரம் ஐந்துமுக ருத்ராட்ச்களை கொண்டு 8 அடி சிவலிங்கத்தை வடிவமைத்து காஞ்சிபுரம் பூக்கடை சத்திரத்தில் கொண்டு வந்து சிவ மேளதாளங்கள் முழங்க சிறப்பு பூஜை மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.


இதனைத் தொடர்ந்து மேற்கு ராஜவீதி கிழக்கு ராஜவீதி , பேருந்து நிலையம், அன்னை இந்திரா காந்தி சாலை, கச்சபேசுவரர் கோயில் , சங்கர மடம் உள்ளிட்ட வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லபட்ட போது வழிநெடுகளும் பக்தர்கள் பூமாலை பூக்கள் மற்றும் தீபாராதனை மேற்கொண்டு ருத்ராட்ச சிவலிங்கத்தை வணங்கி சென்றனர்.

காலை 8 மணிக்கு துவங்கிய ஊர்வலம் மதியம் ஒரு மணி வரை நடைபெற்று அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பருவத மலைக்கு அடிவாரத்துக்கு செல்லும் ருத்ராட்ச சிவலிங்கத்தை தரிசித்து சென்றனர். பின் அங்கிருந்து ஊர்வலமாக சென்று நாளை மாலை பருவதமலைக்கு அடிவாரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கோவிலுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

ஒரு லட்சத்து 8ஆயிரம் ஐந்துமுக ருத்ராட்சியத்தை கொண்டு வடிவமைக்கப்பட்ட 5 அடி உயரம் கொண்ட சிவலிங்கத்தை தரிசிக்க வழியெங்கும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இவ் விழாவை தொடர்ந்து பூக்கடை வியாபாரிகள் மற்றும் அன்னதான அறக்கட்டளை சார்பில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு மோர் மற்றும் தயிர் சாதம் உள்ளிட்டவைகள் பிரசாதங்களாக வழங்கப்பட்டது.

Updated On: 22 April 2023 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...