/* */

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்

காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் இன்று சாமி தரிசனம் செய்தார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்
X

காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கடவுள் பக்தி மிக்கவர். இவரது வீட்டு பூஜை அறையில் சீரடி சாய் பாபாவின் சிலை முக்கிய இடம் வகித்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும் ஸ்டாலின் குல தெய்வமான மேல்மலையனூர் அங்காளம்மன் படத்தையும் பூஜையறையில் துர்கா ஸ்டாலின் வைத்துள்ளார். துர்கா ஸ்டாலின் குல தெய்வமும் அங்காளம்மன் தான் என்கின்றனர் அவரது குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள்.

இந்நிலையில், காஞ்சிபுரத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று கடந்த ஓராண்டுக்கு முன்பு துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார். தமிழகத்தில் பத்து ஆண்டுகளுக்கு பிறகு தி.மு;க ஆட்சி மீண்டும் அமைந்ததை தொடர்ந்து கோவில் நகரமான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு துர்கா ஸ்டாலின் அப்போது வந்திருந்தார்.

இதையடுத்து, தற்போது மீண்டும் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் துர்கா ஸ்டாலின் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார். தமிழக முதல்வர் ஸ்டாலின் ஓராண்டு ஆட்சியை சீரும் சிறப்புமாக நிறைவு செய்துள்ள நிலையில், துர்கா ஸ்டாலின் காமாட்சி அம்மனை வழிபட்டது பக்தர்கள், கோவில் ஊழியர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் இன்று மாலை 6மணி அளவில் துர்கா ஸ்டாலின் சாமி கும்பிட்டார். அம்மனுக்கு உகந்தநாள் வெள்ளிக்கிழமை என்பதால் கோவிலில் அதிக கூட்டம் இருந்தபோதும் இன்று சிறப்பு தரிசனம் முறையில் மேற்கொண்டார் .

Updated On: 24 Jun 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...