/* */

அதி நவீன வசதிகளுடன் போலீஸ் நிழற்குடை திறப்பு

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே அதி நவீன வசதிகள் கொண்ட போக்குவரத்து காவல் பூத் திறக்கப்பட்டது.

காஞ்சிபுரம் நகரத்தின் முக்கிய பகுதியாக விளங்குகிறது இரட்டை மண்டபம் என அழைக்கப்படும் பகுதி . இப்பகுதியை ஒட்டி பேருந்து நிலையம் , திருக்கோயில்கள் , உணவகங்கள் , மருத்துவமனை , பெருநகராட்சி அலுவலகம் என பல அமைந்துள்ளதால் எப்போதுமே போக்குவரத்து அதிகமாகவே காணப்படும்.இதை அப்பகுதியில் சீர்செய்யும் காவலர் போக்குவரத்து சிக்னல் கொண்டு இயங்கி வருவதும் சிக்னல் செய்யுமிடத்தில் அமர போதுமான இடவசதி மற்றும் கோடை காலத்தில் வெப்பத்தை தணிக்க இயலாமல் பணிபுரிவதை கண்ட மாவட்ட போலீசார் அதை புனரமைக்க முடிவு செய்தனர்.

இந்நிலையில் மருந்துவ ஆய்வகத்தினர் இதனை சரிசெய்ய தாங்கள் முன் வருவதாக கூறி காவல்துறையும் அனுமதித்தனர். அதன் பேரில் நிழற்குடையை அதி நவீன வசதிகளுடன் பல லட்சம் செலவில் புனரமைத்து உள்ளனர்.இப்பகுதியில் போலீசார் சார்பில் நள்ளிரவிலும் துல்லியமாக படம் பிடிக்கும் வகையில் 4 திசைகளிலும் அதிநவீன சுழல் கேமரா , காவலர் அசதியின்றி பணிபுரியம் வகையில் கூரை அமைப்பு , மின் விளக்கு மற்றும் அதிநவீன டிஜிட்டல் சிக்னல் என இதில் அமைக்கப்பட்டுள்ளது.இதனை இன்று காஞ்சி மாவட்ட எஸ்பி., சண்முகப்பிரியா திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சிவகாஞ்சி இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் நியூ மெட் மருத்துவ ஆய்வக உரிமையாளர் , போக்குவரத்து ஆய்வாளர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 18 April 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்