/* */

காஞ்சிபுரம் மாநகராட்சி: பாமக தனித்து போட்டி. மாம்பழம் இனிக்குமா?

காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி பாமக தனியாக மாநகராட்சி தேர்தலில் களம் காண்கிறது

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாநகராட்சி: பாமக  தனித்து போட்டி. மாம்பழம் இனிக்குமா?
X

வேட்புமனு தாக்கல் செய்த பாமக வேட்பாளர்கள் 

காஞ்சிபுரம் பெருநகராட்சியாக இருந்த நிலையில் தரம் உயர்த்தப்பட்டு மாநகராட்சியாக மாறிய பின் நடைபெறும் முதல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. பிப்ரவரி 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை துவங்கி இன்று மாலை 5 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது.

மொத்தம் 51 வார்டு பதவிகளுக்கு 409 நபர்கள் வேட்பு மனு செய்துள்ளனர். இதில் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் தனித்து போட்டியிடும் பாமக நிறுவனர் டாக்டர். ராமதாஸ் அறிவித்தார்.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கன்னியப்பன் 36 வார்டிலும், நாராயணமூர்த்தி 34 வார்டிலும், சூர்யா 42வது வார்டு, கதிர்வேலன் 50வது வார்டிலும், அமுதா 19வது வார்டிலும், சண்முகம் சரஸ்வதி 10வது வார்டிலும், செல்வராஜ் 44 வது வார்டிலும், நாகராஜ் முதல் வார்டிலும் , ஜானி 48 வது வார்டிலும் , தியாகு 14 வார்டில் என மொத்தம் 41 பேர் பாமக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் பகுதியில் கணிசமான வாக்கு, இளைஞர்களை அரவணைக்கும் மாவட்ட செயலாளர்‌ மகேஷ்குமார், முன்னாள் மாவட்ட செயலாளர் உமாபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சக்தி கமலாம்மாள், செவிலிமேடு செல்வராஜ் என அனுபவங்கள் கொண்டவர்கள் உள்ளதால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனியாக தேர்தல் களம் காணும் நிலையில், உற்சாகத்துடன் பணியாற்றி மாம்பழத்தை இனிக்க செய்வார்களா‌? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


படவிளக்கம்- வேட்புமனு தாக்கல் செய்யும் பாமக வேட்பாளர் கன்னியப்பன் மற்றும் பாமக வேட்பாளர்கள்

Updated On: 4 Feb 2022 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  2. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  3. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  4. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  5. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  6. திருவள்ளூர்
    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை
  7. க்ரைம்
    கரூர் அருகே விவசாய கிணற்றில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் அன்பில் தர்மலிங்கத்தின் 105 வது பிறந்த நாள் விழா
  9. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  10. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...