/* */

ஜூன் 2 ல் பதினைந்து திருக்கோயில் பெருமாள் பங்கேற்கும் கருடசேவை காட்சி

பெருநகர் செய்யாற்றில் அபூர்வ நிகழ்வில் 15 கிராமங்களை சேர்ந்த கோயில்களில் பெருமாள் கருட சேவை வாகனத்தில் எழுந்தருள்வர்

HIGHLIGHTS

ஜூன் 2 ல்  பதினைந்து  திருக்கோயில் பெருமாள் பங்கேற்கும்  கருடசேவை காட்சி
X

கடந்தாண்டு நடைபெற்ற 15 கிராம திருக்கோயில் பெருமாள் கோவில் கருட சேவை வாகனத்தில் எழுந்தருளிய போது (பைல் படம்).

காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் அமைந்துள்ள கூழமந்தல் கிராமத்தில் செய்யாற்றில் 15 கிராமங்களைச் சேர்ந்த பெருமாள் சுவாமிகள் கருட சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி வரும் ஜூன் மாதம் 2 ஆம் தேதி நள்ளிரவு நடைபெறவுள்ளது.

காஞ்சிபுரம் அருகே கூழமந்தல் கிராமத்தில் ஸ்ரீ பேசும் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் 17ஆம் ஆண்டு கருட சேவை விழாவின் போது காஞ்சிபுரம் அருகே கூழமந்தலுக்கும் பெருநகருக்கும் இடையில் உள்ள செய்யாறு ஆற்றில் 15 கிராமங்களில் உள்ள பெருமாள்கள் கருட வாகனத்தில் அலங்காரமாகி எழுந்தருளும் ஆற்றுத்திருவிழா நிகழ்வு நடைபெறுகிறது. அவ்வகையில் இத்திருவிழா வரும் ஜூன் மாதம் 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பெருமாளை தரிசிக்கும் பக்தர்களுக்கு நினைத்தது நடக்கும், புத்திர பாக்கியம் கிட்டும் எனவும் பக்தர்களால் நம்பப்படுகிறது.

இது குறித்து ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் அறங்காவலரும், அர்ச்கருமான வெங்கடேச ராமானுஜ தாசர் கூறியதாவது: கூழமந்தல் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் 17 வது கருட சேவையையொட்டி வரும் ஜூன்.2 ஆம் தேதி காலையில் பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனமும், மதியம் அன்னதானமும் நடைபெறுகிறது.மாலையில் சுவாமி வீதிஉலாவும் அதனையடுத்து பெருமாள் வெள்ளாமலை வழியாக செய்யாற்றுக்கு எழுந்தருள்கிறார். இதன் தொடர்ச்சியாக செய்யாற்றில் வெள்ளிக்கிழமை இரவு சனிக்கிழமை அதிகாலையில் 15 கிராமங்களைச் சேர்ந்த பெருமாள்கள் கருடவாகனத்தில் அலங்காரமாகி ஒன்றாக இணைந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளனர்.

இந்நிகழ்வில்கூழமந்தல் பேசும் பெருமாள்,சிறிய கூழமந்தல் அசையும் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள்,உக்கல் வேணுகோபால சுவாமி,மானாம்பதி சீனிவாசப் பெருமாள்,தண்டரை லட்சுமி நாராயணப் பெருமாள், அத்தி கலிய பெருமாள்,மாங்கால் கோவிந்தராஜப் பெருமாள், இளநகர் சீனிவாசப்பெருமாள் உட்பட மொத்தம் 15 பெருமாள்கள் பங்கேற்கும் கருட சேவை நிகழ்ச்சி செய்யாற்றில் ஆற்றுத் திருவிழாவாக நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Updated On: 28 May 2023 1:15 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  2. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  3. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  4. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  5. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  6. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  8. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  9. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...