நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

Namakkal news- நாமக்கல் நகரில் கடும் வெயிலால் பாதிக்கப்படும், பொதுமக்களுக்கு உதவும் வகையில், சேலம் ரோட்டில் பி.என் ரதி ஷேர் மார்க்கெட் நிறுவனம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
Namakkal news, Namakkal news today- நாமக்கல் நகரில் கடும் வெப்பத்தில் நடமாடும் பொதுமக்களுக்கு உதவும் வகையில், தனியார் ஷேர் மார்க்கெட் நிறுவனம் சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் கோடை காலத்தில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. நாமக்கல் நகரில் கடந்த 1 மாதமாக கடும் வெயில் உள்ளது. பகல் நேர வெப்பநிலை 107 டிகிரி பாரன்ஹீட்டிற்கும் அதிகமாக நிலவுகிறது. இதனால் மாலை 7 மணி வரை அனல்காற்று வீடுகிறது. பகல் நேரத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல்வேறு பணிகளுக்காக நாமக்கல் நகருக்குள் சென்று வரும் பொதுமக்கள் பலரும் வெயில் நேரத்தில் நடமாட முடியாமல் தினறுகின்றனர். இதற்காக பல்வேறு இடங்களில் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
நாமக்கல் சேலம் ரோட்டில் உள்ள பி.என்.ரதி செக்யூரிட்டிஸ் என்ற ஷேர் மார்க்கெட் நிறுவனம் சுமார் 12 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பில், சேலம் ரோட்டில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பாலகுமார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் குடிநீர் வழங்கினார். தொடர்ந்து ஒரு மாதத்திற்கு வெயில் நேரத்தில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் தண்ணீர் பந்தல் செயல்படும் என்றும் தினசரி சுமார் 1,000 பேருக்கு நீர் மோர் வழங்கப்படும் எனவு அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu