திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
Tirupur News-நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு நடந்தது.
நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
சித்திரை திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு, அவிநாசி, சேவூர், திருமுருகன்பூண்டியிலுள்ள சிவாலயங்களில், சிவகாமி அம்மன் சமேத ஸ்ரீ நடராஜ பெருமானுக்கு மஹா அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
சித்திரையில் திருவோணம், ஆனியில் உத்திரம், மார்கழியில் திருவாதிரை ஆகிய நட்சத்திர நாட்களிலும், ஆவணி, புரட்டாசி, மாசி உள்ளிட்ட மாதங்களில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதிகளிலும், ஸ்ரீநடராஜ பெருமானுக்கு மஹா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
அவ்வகையில், நேற்று சித்திரை திருவோண நட்சத்திரம் என்பதால், மஹா அபிேஷகம் நடராஜ பெருமானுக்கு செய்விக்கப்பட்டது.
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், சேவூர் வாலீஸ்வர சுவாமி கோவில், திருமுருகன்பூண்டியிலுள்ள திருமுருகநாதசுவாமி கோவில் உட்பட சிவாலயங்களில், சிவகாமி அம்மன் சமேத ஆண்டுக்கு ஆறு முறை மட்டுமே நடைபெறும் மஹா அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், சிவனடியார்கள் சிவபுராணம், தேவாரம் பாராயணம் செய்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பூர் கருப்பராயசுவாமி கோவில் பொங்கல் விழா கோலாகலம்
திருப்பூர், அவிநாசி ரோடு, அனுப்பர்பாளையம்புதுாரில் உள்ள ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ கருப்பராய சுவாமி, ஸ்ரீகன்னிமார் சுவாமி கோவில்களில், பொங்கல் விழா கடந்த, 24ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.
விழாவையொட்டி, நேற்று காலை 6:00 மணி முதல் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நுாற்றுக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு, சுவாமி தரிசனம்செய்தனர். மாலை 4:00 மணிக்கு ஸ்ரீ கருப்பராய சுவாமி, மேள தாளங்கள் முழங்க வான வேடிக்கையுடன் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவில், இன்று மஞ்சள் நீராட்டு விழா, இரவு 8:00 மணிக்கு கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொங்கல் விழா ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu