/* */

புயல் எச்சரிக்கை தொடர்ந்து திங்கட்கிழமை பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாகி உருவாகி வரும் மூன்று நாட்களுக்கு கனமழை காற்றுடன் இருக்கும் என வானிலை மண்டலம் அறிவித்திருந்தது.

HIGHLIGHTS

புயல் எச்சரிக்கை தொடர்ந்து திங்கட்கிழமை பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை
X

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி.

வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் மிக்ஜம் புயல் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி முற்பகல் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும், மசூலிப்பட்டிணத்திற்கும் இடையே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இப்புயல் காரணமாக தமிழகத்தில் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி வரை பல இடங்களில் பலத்த சூறாவளிக்காற்றுடன் கனத்த மழையாக பெய்யும் எனவும் எச்சரித்துள்ளது. புயலின் தாக்கத்தை எதிர்கொள்ள காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.

புயல் மற்றும் மழையால் பாதிப்புகள் ஏற்பட்டால் பொதுமக்களுக்கு உடனுக்குடன் தேவையான உதவிகளை செய்ய வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை,காவல்துறை உள்ளிட்ட 11 துறைகள் அடங்கிய 21 மண்டலக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

அவர்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் இடங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களும் தயார் நிலையில் இருந்து வருகின்றனர்.மழைநீர் அதிகமாக தேங்கியுள்ள பகுதிகளில் அந்தந்த பகுதிகளில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மின் மோட்டார் மூலம் தேங்கியிருக்கும் மழைநீரை அகற்றும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிக அதிக பாதிப்புக்கு உள்ளாகும் இடங்களாக 3 இடங்களும்,அதிக பாதிப்பு உடைய இடங்களாக 21 இடங்கள் உட்பட மொத்தம் 72 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

பலத்தமழையின் போது அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்பட்டு விடாமல் மக்களை உடனுக்குடன் பாதுகாக்கும் வகையில் அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் காஞ்சிபுரத்திற்கு வந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் பேரிடர் தொடர்பான புகார்களை தெரிவிக்க ஏதுவாக 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புயல் தாக்கம் இருக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் , பள்ளிக் கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பு கருதி வரும் திங்கட்கிழமை விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி அறிவித்துள்ளார்.

Updated On: 2 Dec 2023 1:15 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  4. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!
  5. தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் 'தோழி பெண்கள் தங்கும் விடுதி'..!
  6. அரசியல்
    நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?
  7. அரசியல்
    அண்ணாமலைக்கு சிக்கல் : பாஜவில் என்ன நடக்கும்?
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் வெளுத்து வாங்கிய கனமழை: ஒரே நாளில் 812 மி.மீ மழை பதிவு
  9. செங்கம்
    செங்கத்தில் லாரி ஓட்டுநர் அடித்து கொலை
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் திமுக செயற்குழு கூட்டம்