/* */

தேசிய கைத்தறி தினம் : நெசவாளர்களுக்கு பிசியோதெரபி சிகிச்சை சிறப்பு முகாம்

கீழ்கதிர்பூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா பட்டு பூங்காவில் பணியாற்றும் நெசவாளர்கள் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

HIGHLIGHTS

தேசிய கைத்தறி தினம் :  நெசவாளர்களுக்கு  பிசியோதெரபி  சிகிச்சை சிறப்பு முகாம்
X

தேசிய கைத்தறி தினத்தை ஒட்டி கீழ்கதிர்பூர் அறிஞர் அண்ணா பட்டு பூங்காவில் பணியாற்றும் நெசவாளர்களுக்கான சிறப்பு பிசியோதெரபி முகாம்

இந்தியா முழுவதும் கைத்தறி நெசவாளர்களை நினைவு கூறும் வகையில் ஆகஸ்ட் 7ஆம் தேசிய கைத்தறித் தினம் கொண்டாடப்படுகிறது.

தேசிய கைத்தறித்தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூரில் உள்ள பட்டு பூங்காவில் நெசவாளர்களுக்கென பிரத்யேக பிசியோதெரபி மருத்துவ முகாம் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் மலர்கொடி குமார் கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தார்.

இம்முகாமில் ,நெசவாளர்களின் உடல்வலி மற்றும் உடல் உபாதையை கண்டறிந்து உடற்பயிற்சி வழியில் சரிசெய்யும் முறையை குறித்து எடுத்துரைத்து அதனை தொடர்ந்து செய்யும் வழிமுறைகளையும் விளக்கிக் கூறினர். இதில், பட்டுப் பூங்காவில் பணிபுரியும் 100க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


Updated On: 6 Aug 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...