/* */

ரூ.10 லட்சம் மதிப்பில் இரு சிறு பாலப் பணிகளை எம்.பி,.எம்எல்ஏ துவக்கி வைப்பு

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட படுநெல்லி , கொட்டவாக்கம் ஆகிய பகுதிகளில் மாவட்ட கவுன்சிலர் பொது நிதியில் இப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

HIGHLIGHTS

ரூ.10 லட்சம் மதிப்பில் இரு சிறு பாலப் பணிகளை எம்.பி,.எம்எல்ஏ  துவக்கி வைப்பு
X

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட படுநெல்லி கிராமத்தில் மாவட்ட கவுன்சிலர் ராஜலட்சுமி குஜராத் அவர்களின் மாவட்ட ஊராட்சி மேம்பாட்டு நிதியின் கீழ் சிறு மேம்பாலப் பணியினை துவக்கி வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம் பி.எழிலரசன்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் , ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய ஐந்து ஒன்றியங்களில் உள்ள 274 ஊராட்சிகளில் பொதுமக்களுக்கான குடிநீர் வசதி அமைத்து தருதல், பள்ளி கட்டிடம் , சாலை பணி , அங்கன்வாடி மையங்கள் , சமுதாயக்கூடம் உள்ளிட்ட பல்வேறு நல திட்ட பணிகள் நாடாளுமன்ற உறுப்பினர் , சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் மாவட்ட கவுன்சிலர் ஒன்றிய குழு உறுப்பினர் இவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ஆகிய கொண்டு செய்யப்பட்டு வருகிறது.

இதனை ஊரக வளர்ச்சி முகமை மற்றும் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் கடந்த ஓராண்டு பல கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் திறக்கப்படுவதும் , தற்போது புதிய பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவும் தொடர்ந்து பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி வாலாஜாபாத் வடக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட படுநெல்லி ஊராட்சியில் மாவட்ட கவுன்சிலர் ராஜலட்சுமி குஜ்ரால் பொதுநிதியிலிருந்து ரூபாய்.5லட்சம் மதிப்பில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி மற்றும் மாவட்ட கவுன்சிலர் பொற்கொடி அவர்களின் மேம்பாட்டு நிதியிலிருந்து கொட்டவாக்கம் ஊராட்சியில் ரூபாய்.5 லட்சம் மதிப்பில் சிறுபாலம் அமைக்கும் பணியினையும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தனர்.

இந்த இரு வேறு பகுதிகளிலும் பொதுமக்களிடம் அப்பகுதி தேவைகள் குறித்து கேட்டறிந்தனர். கடந்த ஓராண்டுகளாகவே இப்பகுதியில் சிறு பாலம் கோரி மாவட்ட ஆட்சியிரிடம் பல்வேறு மனுக்கள் அளித்த நிலையில் , கடந்த ஓராண்டுக்கு முன் நடைபெற்ற நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் இது போன்ற பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு விடிவு கிடைத்து வருகிறது.

இந்த சிறு பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரருக்கு தரமான பொருட்கள் கொண்டு பணிகளை மேற்கொள்ளவும் குறித்த காலத்தில் பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் பணிகள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

பின்னர், அதே பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட பனை விதைகளையும் நடவு செய்தனர். ஏற்கனவே காந்தி ஜெயந்தி அன்று காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 59 பணி இடங்களில் 8000 மேற்பட்ட பண விதைகள் நடப்பட்டது என்பது, மாவட்டம் முழுவதும் 38,680 பனை விதைகள் நடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் ஒன்றிய குழு பெருந்தலைவர் தேவேந்திரன், ஒன்றிய செயலாளர் பி.எம்.பாபு, மாவட்ட கவுன்சிலர் ராஜலட்சுமி , உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 3 Oct 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?