/* */

காஞ்சிபுரம் ரங்கசாமி திருக்குளத்தில் எம்எல்ஏ எழிலரசன் ஆய்வு

காஞ்சி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ரங்கசாமி திருக்குளத்தில் கழிவுநீர் கலப்பதாக வந்த புகாரையடுத்து எம்எல்ஏ எழிலரசன் ஆய்வு

HIGHLIGHTS

காஞ்சிபுரம் ரங்கசாமி திருக்குளத்தில் எம்எல்ஏ எழிலரசன் ஆய்வு
X

ரங்கசாமி குளத்தில் கழிவுநீர் கலப்பதை ஆய்வு மேற்கொண்ட காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன்.

கோயில் நகரமாம் காஞ்சிபுரத்தின் நகரின் மையப்பகுதியில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது ரெங்கசாமி திருக்குளம். மன்னர் ஆட்சி காலத்திலேயே காஞ்சிபுரம் நகரில் சாலைகளில் வழிந்தோடும் மழைநீர் கோவில் திருக்குளத்தை அடையும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டது.

இந்த வழித் தடங்கள் நாளடைவில் மெல்ல மெல்ல ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களால் தடைபட்டு, தற்போது கழிவு நீர் அனைத்தும் இதில் செல்லும் நிலைமை உருவாகி குளம் அசுத்தமாக காணப்படுவதாக காஞ்சி சட்டமன்ற உறுப்பினர் எழிலரசனுக்கு தொடர் புகார்கள்வந்தன.

தற்போது காஞ்சிபுரம் நகரில் பெய்து வரும் கனமழையின்போதும் இந்த குளத்தில் நீர் இல்லை. கடந்த அறிஞர் அண்ணா நினைவு நூற்றாண்டின் போது, இக்குளம் சுற்றுலாத்துறை சார்பில் பல லட்சம் செலவு செய்து பிரசாத் எனும் திட்டத்தில் புனரமைக்கப்பட்டும் இக்குளத்தில் கழிவுநீர் மட்டுமே தேங்கி காணப்படுகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் திருக்குளத்தை மாநகராட்சி பொறியாளர் உடன் ஆய்வு மேற்கொண்டார். குளக்கரையில் அமைக்கப்பட்ட நடைபாதைகளை முதலில் சரிசெய்து பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வழிவகை செய்யவும் , அதனைத் தொடர்ந்து கழிவுநீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார்.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் மழைநீர் சேகரிப்பு எனும் திட்டத்தில் பல லட்சம் வீண் செய்ததே. இதுபோன்று நிலை இனி ஒருபோதும் உருவாகாது என ஆய்வுக்கு பின் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது பொதுக்குழு உறுப்பினர் எஸ்கேபி சீனிவாசன் , நகர செயலாளர் சன் பிராண்ட் ஆறுமுகம், நகர அவைத்தலைவர் சந்துரு , கமலக்கண்ணன், கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Updated On: 10 Nov 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  8. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  9. ஈரோடு
    ஆப்பக்கூடலில் 14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  10. பொன்னேரி
    பொன்னேரி அருகே தொழிற்சாலையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்