/* */

தனியார் ஸ்கேட்டிங் பயிற்சி மையத்தில் எம் எல் ஏ எழிலரசன்

இளம் வீரர் விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நோக்கில் கேலோ போட்டி நடைபெறும் உள்ள நிலையில் அதற்கான விழிப்புணர்வு ரதத்தினையும் பார்வையிட்டார்.

HIGHLIGHTS

தனியார் ஸ்கேட்டிங் பயிற்சி மையத்தில் எம் எல் ஏ எழிலரசன்
X

காஞ்சிபுரம் தனியார் ஸ்கேட்டிங் மற்றும் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையத்தில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுபட்ட எம்எல்ஏ எழிலரசன்.

கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் நாட்டிலுள்ள இளைஞர்களிடையே விளையாட்டு மற்றும் உடற்தகுதியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, மத்திய அரசின் சார்பில் நடத்தப்படுகின்ற ஒருங்கிணைந்த விளையாட்டு நிகழ்வாகும்.

இந்த விளையாட்டுப் போட்டிகள் 17 வயதுக்குட்பட்ட மற்றும் 21 வயதுக்குட்பட்ட பிரிவுகளைக் கொண்டுள்ளது. கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டியில் 28 வகையான போட்டிகள் நடைபெற உள்ளது.

அதில் சென்னையில் தடகளம், கால்பந்து, குத்துச்சண்டை, வாள்வீச்சு, வாலிபால், பளுதூக்குதல், ஏஸ்குவாஷ், வில்வித்தை, கபடி மற்றும் சிலம்பம் (டெமோ) நடைபெற உள்ளது.தமிழ்நாடு முழுவதும் கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகளின் செய்தியையும் உணர்வையும் பரப்பிட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் விளம்பரம் மற்றும் கேண்டர் (டார்ச்) சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவ்வகையில் காஞ்சிபுரத்தில் இன்று வருகை புரிந்த ரதத்தினை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் வரவேற்று மற்றும் அதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் வகையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மடம் தெரு, அறிஞர் அண்ணா பூங்கா எதிரில் இயங்கி வரும் தனியார் ஸ்கேட்டிங் மற்றும் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையத்தனையும் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் பார்வையிட்டு அதில் பயிற்சி பெறும் மாணவர்களிடையே உரையாடினார்.

தற்போதைய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் விளையாட்டில் அதிக அளவு ஆர்வம் காட்டி வரும் நிலை இது போன்ற பயிற்சிகளை பெற தரமான மைதானங்களும் பயிற்சியாளர்களும் தற்போது காஞ்சிபுரத்தில் இதை துவக்கி உள்ளதால் இதில் பயிற்சி பெற்று பல்வேறு போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் ஆகியோர் துப்பாக்கி சுடுதல் பயிற்சி போட்டியில் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலர் முனைவர் ஜெயசித்ரா, மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மண்டல குழு தலைவர் சந்துரு, பகுதி கழக செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Jan 2024 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?