/* */

ரூ 53 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய எம்எல்ஏ எழிலரசன்..

Kanchipuram MLA Ezhilarasan-காஞ்சிபுரம் தொகுதி சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில் நடுநிலைப் பள்ளிக்கு 19 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வகுப்பறைகளையும் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

Kanchipuram MLA Ezhilarasan
X

Kanchipuram MLA Ezhilarasan

Kanchipuram MLA Ezhilarasan-ரூபாய் 53 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டவுள்ள இரு பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 18.7 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பள்ளி வகுப்பறை கட்டிடத்தையும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் திறந்து வைத்தார்.

காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் கடந்த இரு ஆண்டுகளாக பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் , நியாய விலை கடைகள், நூலகங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பல கோடி மதிப்பிலான நிதி ஒதுக்கி பணிகள் நடைபெற்று வருகின்றன.

அவ்வகையில் நடந்த 2021-22 ம் ஆண்டு ரூபாய் 18.79 லட்சம் மதிப்பீட்டில் சிறுகாவேரிப்பாக்கம் நடுநிலைப்பள்ளியில் இரண்டு வகுப்பறைகள் கட்ட அடிக்கல் நாட்டுப்பட்டு பணிகள் நிறைவு பெற்ற நிலை இன்று அதனை மாணவர்கள் பயன்பாட்டிற்கு காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்.

இதேபோல் திருப்புட்குழி ஊராட்சியில் கிராமப்புற நூலகம் அமைக்க ரூபாய் 35 லட்சம் நிதி ஒதுக்கி அதற்கான பணிகள் துவக்க விழா நிகழ்ச்சியில் எம்எல்ஏ எழிலரசன் கலந்துகொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.

கீழ்கதிர்பூர் ஊராட்சியில் சுமார் 18 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள நியாய விலைக் கடைக்கான பூமி பூஜையில் கலந்து கொண்ட மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார்.

இதனைத் தொடர்ந்து கீழ்க்கதிர்பூர் தொடக்க வேளாண்மை வங்கியின் கீழ் புதிய நியாய விலை கட்டிடம் கட்ட ரூபாய் 18.10 லட்சம் நிதி ஒதுக்கி அதற்கான பூமி பூஜை பணிகளில் கலந்துகொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி , காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மலர்கொடிகுமார், மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் நித்தியா சுகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீதா சீனுவாசன் , வரதராஜன் , ஒன்றிய குழு உறுப்பினர்கள் ரேகா ஸ்டாலின், முட்டவாக்கம் மணோகரன், ராம்பஊராட்சி, ஊராட்சி மன்ற தலைவர்கள் ரமேஷ் , சுகுணா மேரி, திலகவதி குமரேசன், திமுக நிர்வாகிகள் தாமல் இளஞ்செழியன் , வழக்கறிஞர் சசிக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 30 March 2024 6:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?