/* */

காஞ்சிபுரம் புதிய நூலக கட்டட பணிகளை துவக்கி வைத்த எம்.எல்.ஏ எழிலரசன்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னதி தெருவில் உள்ள நூலகத்திற்கு புதிய கட்டட பணியினை காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் துவக்கி வைத்தார்

HIGHLIGHTS

காஞ்சிபுரம் புதிய நூலக கட்டட பணிகளை துவக்கி வைத்த எம்.எல்.ஏ எழிலரசன்
X

புதிய நூலக கட்டிட வரைபடம் குறித்து சட்டமன்ற உறுப்பினர் எழிலரசனிடம் விவரிக்கும் அலுவலர்கள்

காஞ்சிபுரம் மாவட்ட நூலகத் துறை சார்பில் ஏகாம்பர நாதர் சன்னதி தெருவில் புகழ்பெற்ற நூலகம் அமைந்துள்ளது இதில் 8,000 பேர் உறுப்பினராகவும் 70க்கும் மேற்பட்ட பல்வேறு தலைப்பிலான புத்தகங்கள் உள்ளது. இது மட்டும் இல்லாமல் பல்வேறு வகையான தினசரி நாளிதழ்கள் வருவதால் பொதுமக்கள் வாசகர்கள் என அனைவரும் இதனை நாடி வருகின்றனர்.

அரசு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கான நூலகத்தில் இணையதள வசதியும் இங்கு உள்ளது. தற்போது உள்ள நூலகம் இட வசதி குறைவு காரணமாக அதை விரிவு படுத்த வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் எழிலரசனிடம் வாசகர்கள் கோரிக்கை வைத்தனர்.

இக்கோரிக்கையை ஏற்று 2020 - 21 தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 30 லட்சமும், பொது நிதியிலிருந்து ரூபாய் 30 லட்சம் ரூபாய் 60 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை இன்று காலை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் நூலகர் அறிவரசு காஞ்சிபுரம் நகர திமுக செயலாளர் சண்முகம் , நகர அவைத்தலைவர் சந்துரு, இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ் , கமலக்கண்ணன் மற்றும் பொதுப்பணித்துறை கட்டடங்கள் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 10 Nov 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?