/* */

காஞ்சிபுரம் ஒன்றிய அலுவலகத்தில் தயார் நிலையில் வாக்குசாவடிகளுக்கு தேவையான பொருட்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் கட்ட தேர்தல் நடக்கும் ஒன்றியங்களுக்கு வாக்குச்சாடிகளுக்கு தேவையான பொருட்கள் தயார் நிலையில் உள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் ஒன்றிய அலுவலகத்தில் தயார் நிலையில் வாக்குசாவடிகளுக்கு தேவையான பொருட்கள்
X

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்கு சாவடிகளுக்கு செல்லும் பொருட்களை ஆய்வு மேற்கொண்டு வரும் தேர்தல் அலுவலர்கள் 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமான ஆறாம் தேதி காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்தரமேரூர் ஒன்றியங்களில் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது.

மேலும் இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்குச் சீட்டுப் பதிவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளுக்கு தேவையான வாக்குபெட்டி, தேர்தல் சுவரொட்டிகள், வேட்பாளர் பெயர்கள், சின்னம் குறித்த போஸ்டர், அலுவலக எழுது பொருட்கள் மற்றும் வாக்குச்சீட்டு என அனைத்தும் தயார் நிலை உள்ளது.

இதேபோல் வாக்குப்பதிவு அன்று வாக்குப் பதிவு செய்ய வரும் மாற்றுத் திறனாளிக்கான சக்கர நாற்காலி அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்ப தயாராக உள்ளது.

காஞ்சிபுரம் ஒன்றிய அலுவலகத்தில் இதற்கான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பூத் வாரியாக பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலரும், தேர்தல் அலுவலர்கள் ஒருவ்வொரு வாக்குச்சாவடிக்கும் செல்லும் பொருட்களை சோதனை மேற்கொண்டு எந்தவித தடங்கலுமின்றி பணிகள் நடைபெற ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆய்வுக்குப் பின் மண்டலங்கள் வாரியாக அடுக்கி வைக்கப்பட்டு நாளை காவல்துறை பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குச்சீட்டு அறைக்கு துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.

Updated On: 4 Oct 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...