/* */

காஞ்சிபுரம்: பட்டு பூங்காவிற்கு துணை மின் நிலையம்- எழிலரசன் எம்.எல்.ஏ ஆலோசனை!

காஞ்சிபுரம் பட்டுப் பூங்காவிற்கான துணை மின் நிலையம் அமைக்கும் பணியை விரைந்து தொடங்குமாறு காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் அறிவுறுத்தினார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம்: பட்டு பூங்காவிற்கு துணை மின் நிலையம்- எழிலரசன் எம்.எல்.ஏ ஆலோசனை!
X

காஞ்சிபுரம் துணை மின்நிலைய பணிகளை எழிலரசன் எம்எல்ஏ ஆய்வு செய்தார்.

கடந்த 2009ம் ஆண்டு மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் சார்பில் காஞ்சிபுரத்தில் பட்டுப் பூங்கா அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து 2012ஆம் ஆண்டு காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் கிராமத்தில் எழுபத்தைந்து ஏக்கர் பரப்பளவில் மாநில அரசு நிதி பங்களிப்புடன் 83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் இதுவரை சில கட்டுமானப் பணிகள் மட்டும் துவங்கப்பட்ட நிலையில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் கடந்த ஆறு ஆண்டுகளாக காஞ்சிபுர பட்டுப்பூங்கா திட்டத்தை விரைவுபடுத்த சட்டமன்றத்தில் பலமுறை அதிமுக அரசிடம் கோரிக்கை வைத்தார்.

2021சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் தமிழக முதல்வர் காஞ்சிபுரம் பட்டுப் பூங்கா பணிகள் விரைவுபடுத்தப்படும் என தேர்தல் வாக்குறுதியாக அளித்தார். அதனடிப்படையில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் கடந்த ஒரு மாதமாகவே இதுகுறித்து அனைத்து துறை அலுவலர்களும் ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி இன்று மின்வாரிய ஊழியர்கள் உடன் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

அதன்படி, காஞ்சிபுரம் பட்டு பூங்கராவிற்கான புதிய துணை மின் நிலையம் அமைக்கும் பணி குறித்து கேட்டறிந்து பல்வேறு மாற்றுப் பணிகளுக்கும் ஆலோசனை வழங்கினார். காஞ்விரைவில் அனைத்துப் பணிகளுக்கும் ஒப்புதல் பெற்று பணிகளை துவங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Updated On: 10 Jun 2021 11:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...