/* */

காஞ்சிபுரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்...

காஞ்சிபுரத்தில் கொட்டகையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1500 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்...
X

ரேஷன் அரிசி கடத்தியதாக கைது செய்யப்பட்ட முருகன்.

தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நியாயவிலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது. பி.எச்.எச். கார்டுகளுக்கு 20 கிலோ அரிசியும் , கூடுதல் நபர்களுக்கு தலா 5 கிலோ அரிசி என 40 கிலோ அரிசியும், பிஎம்ஜிஓய் கார்டுகளுக்கு 20 கிலோ அரிசியும், ஏஏஓய் கார்டுகளுக்கு 40 கிலோ அரிசியும் வழங்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் விலையில்லா அரியை பெறுவோர் அதை மற்றவர்களிடம் விற்பனை செய்யும் நிலையும் இருந்து வருகிறது. சிலர் கால்நடைகளுக்கு உணவு, மற்றும் கோழி வளர்ப்புக்கு என ரேஷன் அரிசியை மொத்தமாக வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

சிலர், மக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி அதை மற்ற அரிசியுடன் கலந்து இட்லி மாவு தயாரித்து விற்பனை செய்யும் நிலையிலும் இருந்து வருகிறது. மேலும் சிலர், அதிகளவு ரேஷன் அரிசி மூட்டைகளை சேகரித்து பின்னர் கேரளா மாநிலத்துக்கு கடத்திச் சென்று விற்பனை செய்யும் தொழிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்களை பணிபுரிய ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வந்து தங்கி இருப்பதால், அவர்கள் ரேஷன் அரிசியை அதிக விலை கொடுத்து வாங்கும் நிலையில் இருந்து வருிகறது.

அதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் நபர்கள் கிராமங்களில் உள்ள பொதுமக்களிடம் இருந்து ஒரு கிலோ 5 ரூபாய் வரை பணம் அளித்து ரேஷன் அரிசியை வாங்கி வட மாநிலத்தவர்களிடம் கிலோ ஒன்றுக்கு 10 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர்.

இதுபோன்ற புகார்கள் வரும்போது, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு காவல்துறையினர் அவ்வப்போது பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுத்து வருகின்றனர். அந்த வகையில், காஞ்சிபுரம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, காவல் ஆய்வாளர் முகேஷ் ராவ் அவர்கள் தலைமையிலான போலீஸார் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, காஞ்சிபுரம் - வேலூர் செல்லும் சாலையில் புதூர் சந்திப்பில் விஷ்ணு மஹால் திருமண மாளிகைக்கு பின்புறம் உள்ள குடோனில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அங்குள்ள ஒரு கொட்டகையில் போலீஸார் சோதனை செய்தபோது அங்கு வெள்ளை நிற பிளாஸ்டிக் பையில் 50 கிலோ எடை கொண்ட 21 மூட்டைகள் என மொத்தம் 1500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது, முருகன் என்பவர் சிறு காவேரிப்பாக்கம் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி அதனை காஞ்சிபுரம் பகுதியில் வசிக்கும் வட மாநில தொழிலாளர்கள் மற்றும் டிபன் கடைகளுக்கு கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, போலீஸார் முருகனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

Updated On: 21 Nov 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  7. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  8. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  9. இந்தியா
    சென்னை ஐ.ஐ.டி.,யின் பறக்கும் டாக்ஸி!
  10. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...